Kaaduvetti OTT: ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: பா.ம.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான திரைப்படம் காடுவெட்டி. இப்படத்தை ஹீரோவாக தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடித்திருந்தார். மார்ச் மாதம் தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது.

சோலை ஆறுமுகம் இயக்குநராக அறிமுகமான இத்திரைப்படத்தில், ஆர்.கே சுரேஷ், சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் என பலரும் நடித்திருந்தனர். வணக்கம் தமிழா சாதிக் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைக்க மஞ்சள் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

RK suresh OTT

காடுவெட்டி: இந்த படத்திற்கு சென்சார் போர்டு நிறைய கட்டுப்பாட்டுகள் விதித்தது. காடுவெட்டி என்ற டைட்டிலேயே பயன்படுத்தக் கூடாது என சென்சார் போர்டு தடை விதித்த நிலையில் அதன் பிறகு விளக்கம் கொடுத்து அந்த டைட்டில் வாங்கியது படக்குழு. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் சென்சார் போர்ட்டில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 31 காட்சிகளை நீக்கிய நிலையில் பல இடங்களில் வசனங்களும் மியூட் செய்யப்பட்டு படம் வெளியானது.

காடுவெட்டி படத்தின் கதை: காடுவெட்டி படத்தில் நகரத்து காதலை அவர்கள் அணுகுவது குறித்தும், கிராமத்தில் எவ்வாறு அணகுகின்றனர் என்பதையும் மையமாக வைத்து இப்படம் இயக்குநர் இயக்கி உள்ளார். மேலும், கிராம புறத்தில், காதல் கதையில் காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், அந்த காதலால் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை படம் காட்டி உள்ளது. படத்தின் கதாநாயகனான சுரேஷ், தான் சார்ந்த சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் நபராக நடித்திருந்தார்.

கிண்டலடித்த நெட்டிசன்ஸ்: காடுவெட்டி குரு வன்னிய சமுதாய மக்களால் கடவுளாக பார்க்கப்படுகிறார். இதனால் காடுவெட்டி படத்தை வன்னிய சமுதாய மக்கள் பெரிய அளவில் கொண்டாடிய போதும் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. ஆனால், காடுவெட்டி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளதாகவும் அதற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என ஆர்.கே. சுரேஷ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டதை அடுத்து, ப்ளுசட்டை மாறன் முதல் நெட்டிசன்கள் வரை அனைவரும் அவரை வெச்சு செய்துவிட்டார்கள். இந்நிலையில், இத்திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ஆனால் எந்த நாள் வெளியாகும் என்ற தகவலை படக்குழு வெளியிட வில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X