Pushpa 2 OTT: ஓரவஞ்சனை காட்டும் நெட்ஃபிளிக்ஸ்.. இறங்கி அடிக்கும் ரசிகர்கள்.. புது பிரச்னையில் புஷ்பா2

பெங்களூர்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இது ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் அடுத்த பாகம். சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் வசூலில் இதுவரையிலான ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் மற்ற படங்களின் வசூலைக் காட்டிலும் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது. படம் ஓடிடி தளத்தில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. இதில்தான் பிரச்னையே ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தாறுமாறான வசூலைக் குவித்தது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு இருந்ததால், படத்தின் டிக்கெட் விலை ஆயிரங்கள் வரை வசூல் செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் இணையத்திலும் செய்திகளிலும் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பினாலும், அவ்வளவு பணம் கொடுத்து படத்தினைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வழக்கத்தை விட மூன்று மடங்குவரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.

pushpa 2 netflix

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் பெரும் சம்பவமே செய்துள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளிலும், இந்தி திரையுலகிலும் படத்தின் வசூல் என்பது மற்ற இந்தியப் படங்களை விடவும் அதிகம் வசூலித்த படமாக உருவெடுத்துள்ளது. இந்தியில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 900 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. படம் உலகம் முழுவதும் ரூபாய் 2,000 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது இல்லாமல், ஓடிடி விற்பனை, படத்தின் பாடல் விற்பனை என படக்குழுவுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 2,400 கோடிகள் வரை மொத்த பிஸ்னஸ் நடைபெற்றுள்ளது.

பிரச்னை: படம் வெளியான நாளில் இருந்து பிரச்னை மேல் பிரச்னை புஷ்பா 2 படம் மற்றும் படக்குழுவினரைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. ப்ரீ ரிலீஸின் போது ரசிகை ஒருவர் இறந்தது, அதன் பின்னர் அல்லு அர்ஜுன் கைது, அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் என பெரும் பிரளயமே நடந்துவிட்டது. இப்படியான நிலையில் படம் ஓடிடி தளத்தில் அதுவும் ரீ லோட் செய்யப்பட்ட வெர்ஷன் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது படம் முதலில் 200 நிமிடங்களுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. அதாவது, 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. அதன் பின்ன்ர் கூடுதலாக 23 நிமிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் படத்தின் நீளம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 45 நிமிடங்களாக மாறியது. இதனைப் பார்க்கவும் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தார்கள்.

pushpa 2 netflix

கன்னடம்: இப்படியான நிலையில், படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. இதில் கன்னட வெர்ஷன் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக இணையதளத்தில் அவர்கள், கன்னட சினிமா உலகினை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றது. அதுவும் குறிப்பாக கன்னடப் படங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டுவதில்லை. இது கன்னட சினிமா மீது இருக்கும் ஓரவஞ்சனை தான் என ரசிகர்கள் கூறுகின்றனர். கன்னட திரையுலகில் அதிகம் கவனிக்கப்படும் இயக்குநர் என்றால் அது பிரசாந்த் நீல். ஆனால் அவரது பகீரா படத்தை அதிக விலைக்கு வாங்கக் கூட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் சார்பில், விரைவில் கன்னட வெர்ஷன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pushpa 2 netflix

ஓடிடி சாதனை: படம் ஓடிடி தளத்திலும் சாதனை படக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, படம் தென்னிந்திய படமான 'லக்கி பாஸ்கர்' ஓடிடி ஸ்ட்ரீமிங்கை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் ஹிந்தியில் முதல் வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட அனிமல் படத்தை விடவும் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 19.7 மில்லியன் பார்வையாளர்களுடன் 2024இல் முதல் இடத்தினைப் பெற்ற மகாராஜா படத்தின் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

pushpa 2 netflix

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X