புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி விற்பனை பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதாக ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு தொகையை வெறும் டிஜிட்டல் உரிமத்துக்காக எந்தவொரு ஓடிடி நிறுவனமும் தந்தது இல்லை எனக் கூறுகின்றனர்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்த முதல் பாகம் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பார்ட் 2 இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.

புஷ்பா 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் வியூஸை கடந்து சாதனை படைத்தது.
புஷ்பா ஓடிடி உரிமம்: அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் பெற்றார். அந்த படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 100 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது புஷ்பா 2 மூன்று மடங்கு அதிக தொகைக்கு விற்பனையாகி இருப்பதாக எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
இந்தி ரைட்ஸ் 200 கோடி: புஷ்பா 2 படத்தின் இந்தி ரைட்ஸை தயாரிப்பாளர் அனில் தடானி 200 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாராம். பாலிவுட் படங்கள் இந்தியிலே 200 கோடி ரூபாயை வசூல் செய்யாத நிலையில், டோலிவுட் படமான புஷ்பா 2 படத்தை முன் கூட்டியே 200 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். இந்தியில் மட்டுமே 500 கோடிக்கு மேல் புஷ்பா 2 வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓடிடி உரிமம்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமே அதிக பட்சமாக 175 கோடிக்கு 3 ஓடிடி நிறுவனங்களிடம் விற்பனையானது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மட்டுமே 275 கோடி ரூபாய் கொடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
திணறும் டாப் நடிகர்கள்: அஜித்தின் துணிவு, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான அஜய் தேவ்கனின் மைதான், அக்ஷய் குமாரின் படே மியான் சோட்டே மியான் உள்ளிட்ட படங்களே இந்தளவுக்கு வசூலை பார்த்தது கிடையாது என்றும் எப்புட்றா என்பது போல ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களே ஷாக் ஆகி பார்த்து வருகின்றனர். விஜய்யின் கோட் படத்தின் ஓடிடி உரிமம் 125 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகுபலி வசூலை முறியடிக்குமா?: டோலிவுட்டில் இதுவரை வெளியான படங்களிலேயே பாகுபலி 2 திரைப்படம் தான் 1800 கோடி வசூல் செய்துள்ளது. பாலிவுட் படமான தங்கல் திரைப்படம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டு 2000 கோடி வசூல் செய்துள்ளது. அந்த வசூலை புஷ்பா 2 முறியடிக்குமா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2வுக்கு போட்டியாக எந்தவொரு பெரிய படங்களும் வராது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











