Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓடிடியில் வெளியாகும் புஷ்பா.. வெளியானது ரிலீஸ் தேதி!
சென்னை : நடிகர் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் புஷ்பா.
ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பார்.
சுமார் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த புஷ்பா திரைப்படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாகிறது.
நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு... கவலையில் ரசிகர்கள்

அல்லு அர்ஜுன் மிரட்டலான நடிப்பில்
நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

லாரி டிரைவராக நடித்துள்ள
ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள புஷ்பா திரைப்படம் , பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பல்வேறு தடைகளைத் தாண்டி இறுதியாக டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

பகத் பாசில் போலீஸ் அதிகாரியாக
செம்மரக் கடத்தலை பற்றிய படமாக வெளியான புஷ்பாவில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக பகத் பாசில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்திற்கு இந்திய அளவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது

300 கோடிக்கும் மேல் வசூல்
மேலும் இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் வந்து குத்தாட்டம் போட்டு சென்றிருப்பார். இந்த பாடல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. இன்று வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு உள்ள புஷ்பா திரைப்படம் சுமார் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனவரி 7ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில்
இதுவரை அல்லு அர்ஜுன் திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் நேரடியாக டப்பிங் செய்துள்ளது தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாராகி வந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் புஷ்பா ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதாவது ஜனவரி 7ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் புஷ்பா வெளியாக உள்ளது.