twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆந்தலாஜியில் அழகான மெல்லிய உணர்வைச் சொல்லும் ’மௌனமே பார்வையாய்’

    |

    'புத்தம் புது காலை' ஆந்தாலஜியின் முதல் பாகத்தைத் தொடர்ந்து 2-ம் பாகமாக, 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜி படம் அமேசான் பிரைமில் நேற்று வெளியானது. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி தொகுப்பில் அரைமணி நேரம் ஓடக்கூடிய 5 படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலிடத்தை பிடிப்பது சந்தேகமே இல்லாமல் 'மௌனமே பார்வையாய்' படமே. கொரோனாவில் ஊடலில் இருக்கும் தம்பதியின் மன ஓட்டத்தை அழகாக படம்பிடித்துள்ளனர். மற்ற 4 படங்களில் 2 படங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    Navarasa Movie official update கதை இதுதான் | Suriya Sivakumar, Maniratnam

    நாங்க வசூல் மட்டுமில்லீங்க... விருதுகளையும் குவிப்போம்ல... நிரூபித்த மாநாடு நாங்க வசூல் மட்டுமில்லீங்க... விருதுகளையும் குவிப்போம்ல... நிரூபித்த மாநாடு

    முதலிடத்தில் மௌனமே பார்வையாய்

    முதலிடத்தில் மௌனமே பார்வையாய்

    ஆந்தலாஜி கதைகள் தொகுப்புகளாக வெளிவந்து பெரிய படங்கள் சொல்லாததை அரைமணி நேர கதை நமக்கு பல விஷயங்களை சொல்கிறது. அதில் 'புத்தம் புது காலை விடியாதா' தொகுப்பும் ஒன்று. மௌனமே பார்வையாய், முகக்கவச முத்தம், லோனர்ஸ், தி மாஸ்க், நிழல் தரும் இதம் ஆகிய 5 படங்கள் வெளியாகியுள்ளன.

    ஆந்தலாஜியில் 5 படங்கள்

    ஆந்தலாஜியில் 5 படங்கள்

    இதில் முதலிடத்தை மௌனமே பார்வையாய் படம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை லோனர்ஸ் படமும், 3 ஆம் இடத்தை முகக்கவச முத்தமும், அடுத்து மாஸ்க், கடைசியில் நிற்பது நிழல் தரும் இதம். இதில் முதலிடத்தில் உள்ள மௌனமே பார்வையாய் படத்தில் நடித்திருப்பது இரண்டே கதா பாத்திரங்கள்தான். இருவரும் மிகப்பெரிய ஆளுமைகள். நதியா மற்றும் ஜோஜு ஜார்ஜ். மற்றும் மகளாக, டெலிவரி பாயாக சிலர் வந்து போகிறார்கள்.

    மௌனமே பார்வையாய்

    மௌனமே பார்வையாய்

    தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு பேசாமல் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் இருக்கும் இருவரும் பேசாமல் இருப்பதும், கொரோனா தொற்று மனைவிக்கு வந்துவிட்டதோ என்கிற தவிப்பில் கணவன் ஜோஜு தவிப்பதும் அழகாக நுணுக்கமாக சொல்லப்பட்டுள்ளது. மனைவியை மதிக்காத கணவன் அவளது நுணுக்கமான உணர்வை சிதைப்பது அழகாக காட்டப்பட்டுள்ளது.

    இப்படிக்கூட சொல்லமுடியுமா உணர்வுகளை?

    இப்படிக்கூட சொல்லமுடியுமா உணர்வுகளை?

    வீட்டுக்குள் இருக்கும் இரண்டுபேர் பேசாமல் கோபத்துடன் ஆனால் வேறு வழியில்லாமல் தங்கள் உணர்வை மற்றவருக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிகழ்வை அழகாக படமாக்கியுள்ளார் இயக்குநர் மதுமிதா. கணவர் முரளியாக வரும் ஜோஜு ஜார்ஜ் மனைவியிடம் காப்பிக்கேட்டு செருமுவதும் மனைவி காப்பி கொண்டு வந்து வைப்பதும், கடைக்குச் செல்லும் முன் மனைவி நதியா என்ன பொருள் வேண்டும் என்பதை போர்டில் எழுதி வைப்பதும், அதில் மிளகாய் என மொட்டையாக இருப்பதை கேட்கத்தயங்கி இரண்டுவகை மிளகாய்களையும் வாங்கி வருவதும் நகைச்சுவைக்காட்சிகள்.

    நகைச்சுவை இழையோடும் காட்சிகள்

    நகைச்சுவை இழையோடும் காட்சிகள்

    ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக ஆன்லைன் மூலம் முழுப்பாட்டில் மதுவை கணவர் ஜோஜு வாங்குவதும், அதை வாங்கக்கூடாது என்பதற்காக மிக்சியை வேகமாக ஓடவிட்டு நதியா கோபத்தை காட்டியதும், அதைக் கொடுத்துவிட்டு ஆஃப் பாட்டில் வாங்குவதும் அதற்கும் ஆட்சேபம் தெரிவித்து மிக்சியை ஓடவிட்டு எதிர்ப்பை காண்பித்ததும் அது குவார்ட்டர் பாட்டலாக மாறுவதும் நல்ல நகைச்சுவை.

    2 பேர் 30 நிமிடம் வேகம் காட்டும் படம்

    மனைவிக்கு கொரோனா இருக்குமோ என்கிற தவிப்பில் கணவர் தவிப்பதும் அதன் பின் நடப்பதும் சுவையான சம்பவங்கள். இரண்டுபேரை மட்டுமே வைத்து வசனம் இல்லாமல் அரை மணிநேர படத்தை வேகமாக நகர்த்தியுள்ள இயக்குநரை பாராட்டித்தான் தீரவேண்டும்.

    English summary
    'Putham Pudhu Kaalai Vidiyaadha’ Review : Mouname Paarvayaai deals with difficult emotions and estranged relationships
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X