ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி ...காணாமல் போன விவசாயி பற்றி சூர்யா

சென்னை: அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது.

இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார்.

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

செப்டம்பர் 24ஆம் தேதி

செப்டம்பர் 24ஆம் தேதி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.அமேசான் பிரைம்- சமீபத்திய திரைப்படங்கள், பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்டப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரம் இல்லாமல் இசையை கேட்பதற்கான அமேசான் பிரைம் மியூசிக்.. என்று பல புதிய திட்டங்களுடன் கலந்து கட்டி தூள் கிளப்புகிறது .

 15 செப்டம்பர் 2021

15 செப்டம்பர் 2021

அமேசான் பிரைம் வீடியோ, 2டி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் முன்னோட்டத்தை, நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகிறது. இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம்.

வாணி போஜன் , ரம்யா பாண்டியன்

வாணி போஜன் , ரம்யா பாண்டியன்

மனிதநேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார், ராஜசேகர் சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

காணாமல் போன விவசாயி

காணாமல் போன விவசாயி

'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.

எளிதில் தொடர்புகொள்ளும்

எளிதில் தொடர்புகொள்ளும்

இதுதொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உள்ளடக்க தேர்வுக்குழு தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில்,' ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படம் இதய பூர்வமான மனிதர்களின் உணர்வுகளை சொல்லும் கதை. சூழலுக்கேற்ற நகைச்சுவையுடன் கூடிய இப்படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி முதல் வெளியீடாக 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோ, எப்பொழுதும் வித்தியாசமான கதை சொல்லும் படைப்புகளை ரசனையுடன் தேடி, பார்வையாளர்களுக்கு வழங்குகிறது'. என்றார்.

பதுங்கி இருப்பதாகவே

பதுங்கி இருப்பதாகவே

படத்தைப் பற்றி இயக்குனர் அரிசில் மூர்த்தி பேசுகையில்,' இந்த திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர். படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும். இதனால் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் இப்படத்தைக் காணும்போது சந்தோசமடைவார்கள் என நம்புகிறேன்.' என்றார்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை

எளிய மனிதர்களின் வாழ்க்கை

தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில்,' ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X