ப்பா.. என்னவொரு லிப் லாக் சீன்.. ராஷி கன்னாவா இப்படி? இணையத்தில் தீயாக பரவும் Farzi முத்தக்காட்சி!
சென்னை: தி ஃபேமிலி மேன் படத்தில் சமந்தாவின் படுக்கையறை காட்சிகள் மற்றும் பேருந்தில் அவரிடம் சில்மிஷம் செய்யும் காட்சிகள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் எந்தளவுக்கு ஷாக் ஆக்கியதோ அதே போல தற்போது நடிகை ராஷி கன்னாவின் லிப் லாக் சீன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் மற்றும் ராஷி கன்னா நடிப்பில் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கிய Farzi வெப்சீரிஸ் நேற்று வெளியான நிலையில், அதன் முத்தக்காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷி கன்னா
மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ராஷி கன்னா மணம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமான ராஷி கன்னா தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்தி வெப்சீரிஸ்
அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ருத்ரா வெப்சீரிஸில் ஹீரோயினாக நடித்த ராஷி கன்னா நேற்று விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸில் ஆர்பிஐ அதிகாரியாக கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி உள்ளார்.

தொடர்ந்து விஜய்சேதுபதி உடன்
நடிகை ராஷி கன்னா தமிழில் அறிமுகமான இமைக்கா நொடிகள் படத்தில் விஜய்சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து நடித்து இருந்தார். சங்கத் தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ராஷி கன்னா மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணைந்து இந்த ஃபர்ஸி வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

பிகினி பேபி
ஹோம்லி லுக்கில் நடித்து வந்த ராஷி கன்னா நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து இருந்தார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவியதை போல தற்போது ராஷி கன்னாவின் லிப் லாக் முத்தக்காட்சி டிரெண்டாகி வருகிறது.
லிப் லாக்
ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் அளவுக்கு ஃபர்ஸி வெப்சீரிஸில் லிப் லாக் காட்சியிலேயே நடித்து தென்னிந்திய ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார் ராஷி கன்னா. அதன் வீடியோ க்ளிப்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஹாஷ்டேக் ராஷி கன்னாவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

ஷாகித் கபூருடன்
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த வெப்சீரிஸில் ஹீரோ ஷாகித் கபூர் ஆரம்பத்தில் ஒரு பெண்ணுடன் லிப் லாக் சீன் இருக்கும். அதன் பிறகு, நடிகை ராஷி கன்னாவுடன் இப்படியொரு லிப் லாக் சீனில் நடித்து அதகளம் செய்துள்ளார்.

ஏ சான்றிதழ்
தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் டப்பிங் பேசியிருப்பவர்கள் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தைகளை பேசி நடித்துள்ளனர். மூச்சுக்கு முந்நூறு தடவை அசிங்கமான வார்த்தைகள் இந்த வெப்சீரிஸில் இடம்பெறுகிறது. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸை விஜய்சேதுபதி, ராஷி கன்னா தான நடிச்சிருக்காங்கன்னு குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications











