ஸ்டைல் ஐகான் விருதுக்கு கவர்ச்சி மயிலாக மாறிய ராஷி கன்னா.. பாப் அப்பை பார்த்து பதறிய ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ராஷி கன்னாவின் ரேஞ்சே தற்போது வேறலெவலில் மாறி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஹாட்னஸில் அதிரடி காட்டி வருகிறார்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கன்னா முதன் முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார்.

ஆனால், அவருக்கு அதன் பிறகு இந்தி படங்கள் கிடைக்காத நிலையில், டோலிவுட் மற்றும் கோலிவுட் என நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், சமீப காலமாக இந்தி வெப்சீரிஸ்கள், படங்கள் என பாலிவுட் நடிகையாகவே மாறி வரும் ராஷி கன்னா விருது விழா நிகழ்ச்சிக்காக கவர்ச்சி மயிலாக மாறிய புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றன.

தமிழ் படங்களில் ஹோம்லியாக

தமிழ் படங்களில் ஹோம்லியாக

32 வயதாகும் நடிகை ராஷி கன்னா நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பின்னர் விஷால் உடன் அயோக்யா, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஜய்சேதுபதி உடன் சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் மற்றும் கார்த்தி உடன் சுல்தான் என தன்னை படத்துக்கு படம் அப்கிரேடு செய்துக் கொண்டே சென்று வருகிறார்.

ஃபர்ஸி வெப்சீரிஸ்

ஃபர்ஸி வெப்சீரிஸ்

விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் நடித்த ஃபர்ஸி வெப்சீரிஸில் சமீபத்தில் நடித்த நடிகை ராஷி கன்னாவின் புகழ் வேறலெவலில் உயர்ந்து விட்டது. கோலிவுட்டில் கிடைக்காத முன்னணி நடிகை அந்தஸ்த்து தற்போது பாலிவுட்டில் இவருக்கு தாராளமாக கிடைத்து விடும் என்பதால் தொடர்ந்து இந்தி படங்களை டார்கெட் செய்து நடித்து வருகிறார்.

விருது விழா

விருது விழா

பாலிவுட் ஹங்காமா ஸ்டைல் ஐகான் விருது விழாவில் கலந்து கொள்வதற்காக கருப்பு நிற படு கவர்ச்சியான உடையில் மயில் போல நடிகை ராஷி கன்னா மாறி உள்ள நிலையில், லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் ராஷி கன்னா.

எல்லை மீறிய கவர்ச்சி

எல்லை மீறிய கவர்ச்சி

ராஷி கன்னா ஓடிடியில் நடிகையாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே செம கிளாமர் ரூட்டுக்கு மாறிவிட்டார். ஃபர்ஸி வெப்சீரிஸில் டாப்லெஸ் ஆகவே நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். மேலும், ஷாகித் கபூர் உடன் செம ஹாட்டான லிப் லாக் காட்சியிலும் நடித்து தெறிக்கவிட்டு இருந்தார் ராஷி கன்னா.

அழகு தூக்கலா இருக்கு

அழகு தூக்கலா இருக்கு

கருப்பு நிற கவர்ச்சி கவுனில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை நடிகை ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவரது ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அழகு தூக்கலா இருக்கு என்றும் பாப் அப் ஆகிடப் போகுது என்றும் ரசிகர்கள் பக்க பக்கமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

எகிறுது லைக்ஸ்

எகிறுது லைக்ஸ்

ராஷி கன்னாவின் கவர்ச்சி அழகு எந்தளவுக்கு கண்ணை பறிக்கிறதோ அதை விட பல மடங்கு அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளும், ஹார்டீன்களும் எகிறுகின்றன. ராஷி கன்னாவை டிசைன் டிசைனாக வர்ணித்தும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பாலிவுட் படங்களில்

பாலிவுட் படங்களில்

அடுத்ததாக ராஷி கன்னா நடிப்பில் யோதா எனும் பாலிவுட் படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. மேலும், ஃபர்ஸி சீசன் 2வுக்காகவும் இந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களே காத்திருக்கின்றனர். ஃபர்ஸி வெப்சீரிஸுக்காக ஏகப்பட்ட விருதுகளையும் ராஷி கன்னா குவிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X