திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தவரை என்ன பண்ணேன் தெரியுமா?.. பிரபல இயக்குநர் பளிச் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் மீண்டும் தனது முதல் இடத்தை பிடித்து விஜய், அஜித், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் நடிகை திரிஷா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் மலையாளத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாகவும் அடுத்து இந்தியில் சல்மான் ஜோடியாகவும் திரிஷா நடிக்கப் போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் எல்லாம் வெளியாகியும் கிடைக்காத வரவேற்பு திரிஷாவுடன் கருப்பு டை அடித்து யங் லுக்கில் அஜித் இருக்கும் போட்டோ நேற்று வெளியானதும் இணையத்தில் வேறலெவலில் டிரெண்டானது.

இந்நிலையில், பிரபல இயக்குநர் ஒருவர் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகருக்கு திடீரென யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்தது பற்றி பேசியுள்ளார்.

இயக்குநர் ராதா மோகன் பேட்டி: அழகிய தீயே படத்தை இயக்கி இயக்குநராக 2004-ஆம் ஆண்டு அறிமுகமானவர் ராதா மோகன். பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம், 60 வயது மாநிறம், காற்றின் மொழி, மலேசியா டு அம்னீஷியா மற்றும் பொம்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து 'சட்னி சாம்பார்' எனும் வெப்சீரிஸை இயக்கியுள்ளார் விரைவில் அந்த வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிறது. இந்நிலையில் சமீபத்தில், அவர் அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

திரிஷாவை காதலித்தவரை: தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் திரிஷாவை செல்லம் ஐ லவ் யூ என சொல்லி துரத்தி துரத்தி காதலித்தவரை அடுத்ததாக என்னோட படத்தில் அப்பாவாக நடிக்க வைத்தேன். ஆனால், அப்போது யாருமே அதை தப்பாக பார்க்கவில்லை. அபியும் நானும் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினிமாவில் சில நடிகர்கள் வில்லனாக மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த காலத்தில் ரங்காராவ் வில்லனாகவும் தந்தையாகவும் நடித்திருப்பார். ரகுவரன் மிரட்டல் வில்லனாகவும் சாஃப்ட்டான அப்பா, அண்ணன் கேரக்டரிலும் டோட்டலாக சேஞ்ச் ஆகி நடித்திருப்பார். அதேபோலத்தான் பிரகாஷ் ராஜும் என்றார்.

பொம்மை ஏன் ஓடவில்லை?: எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த பொம்மை திரைப்படம் ராதா மோகன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், அந்த படம் தாமதமாக வெளியான நிலையில் படம் படுதோல்வியை சந்தித்தது. அது தொடர்பான கேள்விக்கு, சில படங்களை நாம் ஒன்று நினைத்து எடுப்போம். கால தாமதம் ஆனாலே, அதே போன்ற படங்கள் வந்துவிடும். அடுத்தடுத்த படங்களிலும் அந்த நடிகர்கள் அதேபோல நடித்திருப்பார்கள். அதுபோன்ற காரணத்தினால் தான் பொம்மை படம் ஓடவில்லை என்றார். மேலும், காலத்திற்கு ஏற்றவாறு நாமும் அப்டேட் ஆகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யோகி பாபு தான் சரி: முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்காமல் இந்த படத்தை யோகி பாபுவை வைத்து ஏன் எடுத்தீர்கள் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கதைக்கு யோகி பாபு தான் சரியாக பொருந்துவார் என நினைத்து தான் அவரை தேர்வு செய்தேன். அவரும் சிறப்பாகவே நடித்துள்ளார் என்றார். யோகி பாபு, வாணி போஜன், சார்லி உள்ளிட்ட பலர் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X