OTT: ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் ஆடையின்றி நடித்த கபாலி பட நடிகை.. இது வேற மாதிரி பையா!

மும்பை: இயக்குநர் மைக்கேல் விண்டர் பாட்டம் இயக்கத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஹீரோவாக நடித்த ஹாலிவுட் நடிகர் தேவ் படேல் நடிப்பில் உருவாகி உள்ள தி வெட்டிங் கெஸ்ட் (The Wedding Guest) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் டாப் டிரெண்டிங்கில் 2வது இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

2018ம் ஆண்டு வெளியான இந்த படம் ஓடிடி ரசிகர்களை வெகுவாக கவர காரணமே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ராதிகா ஆப்தே முழு நிர்வாணமாக நடித்துள்ளது தான்.

Radhika Apte and Dev Patel starred The Wedding Guest movie review in Tamil


பையா படத்தை போலவே இந்த படமும் ரோடு மூவி தான். ஆனால், இது ஜாலியான காதல் கதையாக அமையாமல் வில்லங்கமான கில்மா கதையாக உருவாகியிருப்பதால் நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்கு செம வேட்டையாக அமைந்திருக்கிறது இந்த படம்.

தி வெட்டிங் கெஸ்ட் கதை: இங்கிலாந்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் பாகிஸ்தானில் திருமணத்துக்கு தயாராக உள்ள பெண்ணை அவளது இந்திய காதலனின் விருப்பத்திற்கேற்ப கடத்திக் கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வருகிறான். ஆனால், இந்தியாவுக்கு ராதிகா ஆப்தேவை தேவ் படேல் கடத்திக் கொண்டு வந்து அவருடைய காதலனிடம் ஒப்படைக்கும் நிலையில், இருவருக்கும் இடையே சண்டை வர ஒரு சம்பவம் ஆகி விடுகிறது. அதன் பின்னர், மீண்டும் தேவ் படேலுடன் ராதிகா ஆப்தே கோவா உள்ளிட்ட இடங்களுக்கு பயணித்துக் கொண்டிருக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், கடைசியில் தேவ் படேலுக்கும் தண்ணி காட்டி விட்டு ராதிகா ஆப்தே எஸ்கேப் ஆகி விடுவது ஏன் என்பது தான் இந்த வெட்டிங் கெஸ்ட் படத்தின் கதை.

Radhika Apte and Dev Patel starred The Wedding Guest movie review in Tamil


தேவ் படேல்: ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார் தேவ் படேல். வரும் ஏப்ரல் 26ம் தேதி அவர் நடித்துள்ள மங்கி மேன் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தில் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா நடித்துள்ளார். தேவ் படேல் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பெரும்பாலும் அவரது படங்கள் இந்தியாவை அடிப்படையாக கொண்டு அமைந்து வருகின்றன. அல்லது இந்திய டச் இல்லாமல் இருக்காது. அப்படி வெளியான படம் தான் இந்த வெட்டிங் கெஸ்ட் படம். பாகிஸ்தானுக்கு சென்று ஒரு பெண்ணை காரில் கடத்திக் கொண்டு இந்தியாவுக்கு வரும் விஷயத்தை செம சூப்பராக செய்யும் காட்சிகளில் இவரது நடிப்பு மிரட்டி விடும்.

ஆடை அணியாத ராதிகா ஆப்தே: கபாலி, தோனி, அழகுராஜா என தமிழில் சில படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே ஏற்கனவே முழு நிர்வாணமாக பார்ச்சட் படத்தில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களை ஷாக் ஆக்கினார். இந்நிலையில், தி வெட்டிங் கெஸ்ட் படத்திலும் முழு நிர்வாணமாக எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி அனைத்து அழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார். மங்காத்தா படம் போல கடைசியில் இவர் ஹீரோ தேவ் படேலுக்கே பல்பு கொடுத்து டாட்டா காட்டி விட்டு கம்பி நீட்டும் காட்சியில் எல்லாம் வேறலெவல் நடிப்பை ராதிகா ஆப்தே வெளிப்படுத்தி உள்ளார். பக்கா ஹாலிவுட் நடிகை போலவே எந்தவொரு கூச்சமும் இன்றி ஆடையே இல்லாமல் இவர் நடித்திருப்பதை பார்க்கவே பலரும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த படத்தை பார்த்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

வேற மாதிரி பையா: கார்த்தி, தமன்னா நடித்து வெளியான பையா படத்தை போலத்தான் இந்த படமும் டிராவல் படம். ஆரம்பத்தில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல் இல்லாத நிலையில், போக போக இருவருக்கும் இடையே காதல் மலர்வது போல காட்டுகின்றனர். ஆனால், கடைசியில் வரும் ட்விஸ்ட் தான் ஹைலைட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X