நள்ளிரவில் கணவன் கழுத்தையே கடித்த மனைவி.. மீண்டும் ஆடையின்றி நடித்த ராதிகா ஆப்தே.. சிஸ்டர் மிட்நைட்!
சென்னை: ஹார்ட் ஹேட் குறும்படத்தை இயக்கி திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் கரண் காந்தாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிஸ்டர் மிட்நைட்' (Sister Midnight) திரைப்படம் கடந்த மே மாதமே இங்கிலாந்தில் தியேட்டர்களில் வெளியானது. ஆனால், இன்னமும் இந்தியாவில் இந்த படம் வெளியாகவில்லை.
விருப்பமே இல்லாமல் அரேஞ்ச்ட் மேரேஜ் வாழ்க்கைக்குள் நுழையும் ஒரு பெண் எப்படியெல்லாம் மன ரீதியாக பாதிக்கப்படுகிறாள், அதன் பின்னர், அவள் எந்த எல்லைக்குச் செல்கிறாள் என்கிற கதையை படமாக எடுத்திருக்கிறார் கரண் காந்தாரி.

போல்டான படங்களில் தொடர்ந்து முழு நிர்வாணமாக நடித்து வரும் நடிகை ராதிகா ஆப்தே இந்த படத்திலும் அப்படியொரு காட்சியில் மீண்டும் நடித்து மிரள வைத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.
இப்படியொரு கதையா?: பஞ்சாயத் வெப்சீரிஸில் பினோத் கதாபாத்திரத்தில் நடித்த அசோக் பதாக் இந்த படத்தில் கோபால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை விருப்பமே இல்லாமல் திருமணம் செய்துக் கொண்டு அவருடைய வீட்டுக்கு வருகிறாள் உமா (ராதிகா ஆப்தே). திருமணம் ஆகிவிட்டது, இனி இவனுடன் தான் வாழ்க்கை என நினைத்துக் கொண்டு முதலிரவுக்கு ஆசைப்படும் ராதிகா ஆப்தேவை தொடாமல் அவள் டிரெஸ் மாத்தும் போது கூட வெளியே சென்று விடுகிறான் கணவன்.
அப்புறம் எதுக்குடா நீயெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்ட என்கிற கேள்வி படம் பார்க்கும் அனைவருக்கும் வந்துவிடும். தொடர்ந்து சாதாரண வேலைக்கு செல்வது, குடித்து விட்டு வீட்டுக்கு வந்து வாந்தி எடுப்பது, மனைவியை தொடாமலே குடும்பம் நடத்துவது, மனைவி நெருங்கி வந்தாலும் விலகிச் செல்வது என கோபால் இருக்க, விரக்தியடையும் ராதிகா ஆப்தே நள்ளிரவில் நடுரோட்டில் நடந்துச் சென்று தம் அடிப்பது, சமைக்கவே தெரியாமல் கஷ்டப்படுவது, ஏதாவது வேலைக்குப் போகலாம் என ஒரு கம்பெனியில் மாப் போடக் கூடத் தெரியாமல் க்ளீன் பண்ணும் வேலையில் சேர்வது என காலத்தை ஓட்டுகிறாள்.

படம் எப்படி இருக்கு?: இரவு நேரத்தில் புருஷன் எதுவுமே செய்ய மாட்டேங்கிறானே என்கிற விரக்தியால் தூக்கத்தை தொலைக்கும் அவளுக்கு ஒரு வித மனநோய் ஏற்படுகிறது. அதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் அவள் ஆட்டுக்குட்டி ஒன்றை பார்க்க அதை கடித்து ரத்தத்தை குடிக்கிறாள். அதன் பின்னர், பறவைகள், முயல்கள் என விலங்குகளின் ரத்தங்களை குடித்து அவற்றின் உடல்களை பத்திரப்படுத்துகிறார்.
ஒரு கட்டத்தில், நிர்வாணமாக படுத்துக் கொண்டு கணவனை அழைக்க, அப்போதும் அவன் கூச்சப்பட்டு ஓடி விடுகிறான். ஒருநாள் கணவனுடன் சேர்ந்து குடித்துவிட்டு எப்படியாவது உடலுறவில் ஈடுபட வேண்டும் என நினைத்து உடலுறவிலும் ஈடுபட அதன் பின்னர் கணவனின் ரத்தத்தையும் ருசி பார்த்து விடுகிறாள். கணவன் உயிரிழந்த நிலையில், அவனது உடலையும் வீட்டிலேயே வைத்து, அவனுக்கு அலங்காரம் எல்லாம் செய்து, வீட்டிலேயே சாமி போல கும்பிடும் ராதிகா ஆப்தேவுக்கு கடைசியில் என்ன ஆகிறது, ஏன் இப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறார். போலீசார் அவளை கைது செய்தார்களா? இறந்த உயிரினங்கள் எல்லாம் மீண்டும் எழுந்து பறப்பது ஏன்? என ஏகப்பட்ட கேள்விகளுடன் இந்த படத்தின் கதை செல்கிறது.
ஓடிடியில் இருக்கா?: வெளிநாடுகளில் மட்டுமே இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆப்பிள் டிவியில் பணம் கட்டி பார்க்கும் முறையில் இந்த படம் கிடைக்கிறது. கூடிய விரைவிலேயே அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்டிப்பாக வித்தியாசமான அவார்டு வின்னிங் படங்களை பார்க்கும் நபர்களுக்கு மட்டும் தான் இந்த படம் பிடிக்கும். சாதாரண ஆடியன்ஸ் படத்தை பார்த்தால், கடுப்பாகி விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











