Thaai Kizhavi OTT: ராதிகாவின் ‘தாய் கிழவி‘ ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி திரைப்டபம் பிப்ரவரி 27ந் தேதி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று, நல்ல வசூலை அள்ளி வருகிறது. படம் பார்த்த பலரும் ராதிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ராதிகாவின் அசத்தலான லுக்கில் அவரது கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நகைச்சுவை பாணியில் உருவாகி உள்ள படம் 'தாய் கிழவி. பிப்ரவரி 27ந் தேதி வெளியான இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் சிங்கம் புலி, பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, அருள்தாஸ், ஜார்ஜ் மரியன், முத்துகுமார், ரேச்சல் ரெபேக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

Radhikaa Thaai Kizhavi OTT OTT
Photo Credit:

தாய் கிழவி: ராதிகா சரத்குமார் இதுவரை நடித்த கதாபாத்திரத்தை விட இந்த படத்தில் 75 வயது கிழவியாக பவுனுதாய் என்கிற ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேக்கப்போட்டதாகவும், இந்த படத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று இசைவெளியீட்டு விழாவில் ராதிகா பேசினார். மேலும், நான் சினிமாவில் நடிக்க வந்த போது, என்னை பலரும் அவமானப்படுத்தினார்கள். என் தந்தை எம்.ஆர்.ராதாவி பெயரை சொல்லக்கூடாது என்றார்கள். படத்தில் பயன்படுத்தக்கூடாது என்றார்கள். ஆனால், இன்று எம்.ஆர். ராதாவின் மகள் என்று பெருமையாக, தேனாவட்டாக சொல்கிறேன் என்று பேசி இருந்தார்.

ஓடிடி ரிலீஸ்: தாய் கிழவி படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக ராதிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த படம் முதல் நாளில் மட்டும் ₹2.65 கோடி வசூலித்தது. அதன் பின் மக்களிடம் இருந்த வந்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்து 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.13.65 கோடி வசூலை எட்டி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் OTTஉரிமையை JioHotstar பிரத்யேக ஸ்ட்ரீமிங் பெற்றுள்ளதால், மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இந்த படம் ஜியோஹாட் ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: thaai kizhavi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X