சந்திரமுகி 2 ஓடிடி ரைட்சை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. சூட்டிங்கின்போதே கல்லா கட்டும் லாரன்ஸ் படம்!

சென்னை : நடிகர் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

முதல் பாகத்தை இயக்கிய டைரக்டர் பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார்.

சந்திரமுகி படம்

சந்திரமுகி படம்

நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி. ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார். ரஜினி படங்களுக்கே உரிய அனைத்து அம்சங்களுடன் ஹாரரையும் சேர்த்து வெளியான இந்தப் படம் ரஜினி படங்களில் முக்கியமான படமாக அமைந்தது.

சந்திரமுகி 2 படம்

சந்திரமுகி 2 படம்

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார். முன்னதாக இந்தப் படத்தில் ரஜினியே நடிப்பார் என்று எதிர்பார்ப்பட்ட நிலையில், அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. மாறாக நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தில் இணைந்துள்ளார்.

 மைசூருவில் சூட்டிங்

மைசூருவில் சூட்டிங்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் உருவாகிவரும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த வடிவேலு மட்டுமே நடித்து வருகிறார். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள்தான். இந்தப் படத்தில் 5 ஹீரோயின்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பான வகையில் போடப்பட்டு மைசூருவில் சூட்டிங் துவங்கப்பட்டது.

முதல்கட்ட சூட்டிங் நிறைவு

முதல்கட்ட சூட்டிங் நிறைவு

இதனிடையே படத்தின் முதல்கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பணிகளும் நடைபெற்று வருகின்றன. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கை இந்த ஆண்டிற்கும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

சந்திரமுகி 2 ஓடிடி ரைட்ஸ்

சந்திரமுகி 2 ஓடிடி ரைட்ஸ்

இதனிடையே சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரைட்சை தற்போது நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் சூட்டிங்கே நிறைவு பெறாத நிலையில், ஓடிடி ரைட்ஸ் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

படம் முதல் பாகத்தை போலவே சிறப்பான படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் திரையரங்குகளில்தான் முதலில் வெளியாகவுள்ளது. அதையடுத்தே ஓடிடியில் வெளியாகவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வகையில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X