OTT: தலைவர் 173 இந்த ஹாலிவுட் படத்தின் ரீ மேக்கா? மாஸ் படமாச்சே.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. இவரது நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படமான தலைவர் 173 படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்தின் கதையானது ஒரு ஹாலிவுட் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை குறித்தும் அது எந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பது குறித்தும் பார்க்கலாம்.
தலைவர் 173 படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சூப்பர் ஸ்டாரும் கமல்ஹாசனும் கதை கேட்டு வந்தார்கள். முதலில் அவர்களின் தேர்வு சுந்தர் சி-ஆக இருந்தது. ஆனால் அவர் திடீரென படத்தில் இருந்து விலகினார். இப்படி இருக்கையில் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று பலரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை சுத்துப் போட்டார்கள் இயக்குநர்கள். கடைசியாக சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போக, கமல்ஹாசனும் பச்சைக் கொடி காட்ட, அவரே இயக்குநராக கமிட் செய்யப்பட்டார்.

இந்த படத்தின் படப்பிடிப்பானது, இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ, அல்லது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த சில வாரங்களுக்குள் தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளதால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதை இதுதான்: இப்படி இருக்கையில் இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் உலா வரத் தொடங்கியுள்ளது. தலைவர் 173 என்று இப்போதைக்கு அழைக்கப்படும் இந்த படத்தின் கதையானது கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தி அவுட்ஃபிட் என்ற படத்தின் கதைதான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையானது ஒரு தையல்காரர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் வரும் ஆபத்தை எப்படி எதிர் கொள்கிறார். என்பதை மையமாகக் கொண்டது கதை. இதில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளுமே இருக்கிறது. இதை தமிழ் சூழலுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடி: மேலும் இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. மேலும், இந்த படத்தை, 99 ரூபாய் செலுத்தி ரெண்ட்க்குத்தான் படத்தை வாங்கிப் பார்க்க முடியும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம். இந்த படத்தின் கதையை தழுவி ரஜினியின் படத்தை உருவாக்குவதால் தான், படத்தின் அறிவிப்பில் கத்தரிக் கோல்களும், பட்டன்களும், நூல்களும், துப்பாக்கியும், துணியும் இருந்துள்ளது என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த படத்தின் கதையானது மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற பேச்சுக்கள் இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











