Coolie OTT - ரஜினியின் கூலிக்கு இப்படி ஒரு ரிசல்ட்டா?.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. எதில் பார்க்கலாம்?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாக அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருக்கிறது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் கிடைத்திருக்கிறது.

கோலிவுட்டின் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தை விஜய்யை வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் அசைத்து பார்த்தது. அதனை ரஜினியை வைத்து இயக்கும் கூலி படத்தில் சரி செய்துவிடலாம் என்று நினைத்தார். படத்தில் ரஜினி என்ற மிகப்பெரிய ஸ்டாரை தாண்டியும் நாகார்ஜுனா, அமீர் கான், சௌபின் சாஹிர், உபேந்திரா என வேற்று மொழி ஸ்டார்களையும், தமிழில் இருந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என இதர ஸ்டார்களையும் ஒன்றிணைத்தார்.

ஓவர் ஹைப்: நம்பர் 1 இயக்குநர், பல ஸ்டார்கள், எல்லாத்துக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என பிரமாண்ட கூட்டணியில் உருவான கூலி படத்துக்கு எக்கச்சக்க அளவு ஹைப் ஏற்றப்பட்டது. படக்குழு அதை செய்யவில்லைதான். இயல்பாகவே ஏறிய எதிரிபார்ப்பால்; நிச்சயம் படம் நூறு கோடி ரூபாய் வசூலிக்கும் என்றெல்லாம் ஆரூடமும் கூறப்பட்டது.

Rajinikanth s Coolie to stream on Amazon Prime OTT from next month
Photo Credit:

பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை: அப்படிப்பட்ட நிலைமையில்தான் படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் ரஜினியின் நடிப்பை கொண்டாடத்தான் செய்தார்கள். ஆனால் படத்தை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். பழைய கதையை ரொம்பவே பழைய பாணியில் திரைக்கதையாக அமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்; கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லை என்று விமர்சித்து தள்ளிவிட்டார்கள். மேலும் லோகேஷ் என்னும் பிம்பம் ஏறத்தாழ உடைந்துவிட்டது என்றே கூறுகிறார்கள்.

வசூல் வேட்டை: விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்தான். ப்ரீ டிக்கெட் புக்கிங்கிலேயே நூறு கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டது. முதல் நாளான நேற்று இந்தியாவில் மட்டும் 65 கோடி ரூபாய் வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் போட்டிக்கு ரிலீஸான வார் 2வும் 53 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே வரும் நாட்களில் கூலியை வார் 2 முந்த வாய்ப்புகள் அதிகம். இந்த நிலைமயெல்லாம் படக்குழுவுக்கு கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும்.

கூலி ஓடிடி விவரம்: இது ஒருபக்கம் இருக்க கூலி படம் எப்போது ஓடிடியில் வரும் என்ற கேள்வியும் ரசிகர்க்ளிடையே எழுந்திருக்கிறது. பொதுவாக ஒரு படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் இருக்கிறது. இப்போது கூலிக்கு முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியிருப்பதால்; அடுத்த மாதமே அமேசான் ப்ரைம் ஓடிடியில் படம் ஸ்ட்ரீமாகவும்; அக்டோபர் மாதம் வரவிருக்கும் தீபாவளிக்கு சன் டிவியில் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பவும் வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X