Lal Salaam OTT: அது ஃபேக்.. தீயாக பரவும் லால் சலாம் ஓடிடி ரிலீஸ் தேதி?.. ரசிகர்கள் பார்த்த வேலை!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படமே ஓடிடியில் 2 வாரத்தில் வெளியான நிலையில், பல மாதங்கள் ஆகியும் இன்னமும் லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை.

இந்நிலையில், லால் சலாம் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் வாங்கி விட்டதாகவும் இந்த தேதியில் ஓடிடியில் லால் சலாம் வெளியாவதாக திடீரென ஒரு போஸ்டர் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

rajinikanth lal salaam

#LalSalaam ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் இடம்பெற்ற நிலையில், அந்த ஓடிடி ரிலீஸ் செய்தியே ஃபேக்கான செய்தி என அதிர்ச்சியை கிளப்பியுள்ளனர். ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான் இப்படி ஃபேக் எடிட் செய்து டிரெண்டாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.

இந்தியன் 2வே வந்துடுச்சு: இந்த ஆண்டு வெளியானதில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படமே ஓடிடியில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா நடித்த அந்த படத்தை இயக்கும் போது ஷங்கர் தூங்கி விட்டாரா என சரண்ராஜ் கலாய்க்கும் அளவுக்கு வெளியான அந்த படமே ஓடிடியில் வெளியாகி விட்டதே ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்த படத்துக்கு என்ன தான் பிரச்சனை என ஸ்பேஸ் போட்டு ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

ரஜினி படமும் ராமராஜன் படமும்: இந்த ஆண்டு வெளியான லோ பட்ஜெட் படங்களான பைரி, ஜமா, மோகன் நடித்த ஹரா உள்ளிட்ட படங்கள் கூட ஓடிடியில் வெளியாகி விட்டன. ஆனால், ராமராஜன் நடித்த சாமானியன் படமும் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படங்கள் மட்டும் இன்னமும் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்றும் ஓடிடியில் வெளியாகாது என்றும் கூறுகின்றனர்.

லால் சலாம் ஓடிடி ஃபேக் போஸ்டர்: வரும் செப்டம்பர் 20ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக திடீரென முளைத்த போஸ்டர் காரணமாக #LalSalaam ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பரவாயில்லையே ஒரு வழியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போயும் வெளியான லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாகிறதே என நினைத்து சந்தோஷப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கவலை தரும் செய்தியாக அது ஃபேக் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேட்டையன் வெயிட்டு காட்டும்: இந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி மிரட்டும் என்றும் லால் சலாம் படத்தையே ஒரு கனவாக நினைத்து மறந்து விட வேண்டியது தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துடன் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் மோத போவதில்லை என்றும் சோலோ ரிலீஸாக வெளியாகி வேட்டையன் வெயிட் காட்டும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X