Vettaiyan OTT: ஓடிடியில் வெளியான வேட்டையன்.. ஒருத்தனும் கண்டுக்கலையே.. டிரெண்டே ஆகாத கொடுமை!

சென்னை: ஹார்ட் டிஸ்க் கிடைத்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்னமும் லால் சலாம் ஓடிடியில் வெளியாகவில்லை. கடந்த மாதம் திரையரங்குகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அசல் கோலார், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியான நிலையில் இந்திய அளவில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ott vettaiyan rajinikanth

ஆனால், வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் வெளியான சுவடே தெரியவில்லையே ரஜினிகாந்த் ரசிகர்கள் கூட டிரெண்ட் செய்யவில்லையே ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

ஓடிடியில் வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கன்ட்டென்ட் கிங் என சொல்லப்பட்ட நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. ஆனால், காலை முதலே டிரெண்டிங்கில் அது இடம்பெறவில்லை என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களையே கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

கலவையான விமர்சனம்: ஜெயிலர் படம் போல வேட்டையன் திரைப்படம் ரசிகர்களை அதிக அளவில் கவரவில்லை. அதற்கு காரணம் சூப்பர் ஸ்டாரை தவிர்த்து துஷாரா விஜயனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவரைச் சுற்றியே படம் நடந்ததுதான் என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதே போல முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாதியில் ராணா டகுபதி வரும் காட்சிகள் எல்லாம் சொதப்பலாக இருந்ததாக கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் வேட்டையன் படத்திற்கு அது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது.

ott vettaiyan rajinikanth

300 கோடியை கடந்த வசூல்: வேட்டையன் படத்தின் வசூலுக்கு திடீர் மழை மிகப்பெரிய தடையாக அமைந்து விட்டது. அப்படி இருந்தும் 300 கோடிக்கும் அதிகமான வசூலை வேட்டையன் படம் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே இதுவரை விஜய்யின் கோட் படம் தான் அதிக வசூல் என்கின்றனர். கோட் படத்தின் வசூலை வேட்டையன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்டே ஆகல: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியான சமந்தாவின் சிட்டாடல் வெப்சீரிஸ் டிரெண்டானது. ஆனால், இன்று வெளியான வேட்டையன் படத்தை யாருமே கண்டுக் கொள்ளவில்லை. லைகா நிறுவனம் மீண்டும் ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு நினைவூட்ட இப்பவும் விடாமுயற்சி அப்டேட் கொடுக்க மாட்ட அப்படித்தானே என்றும் லால் சலாம் ஓடிடி எப்போ பாஸ் வரும் என்றும் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X