குறி வச்சா இரை விழணும்.. ஓடிடியில் வெளியான வேட்டையன்.. குஷியில் ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மக்களிடம் ரீச்சாகி வசூலை அள்ளியது. இதில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்திருந்தனர்.மக்களிடம் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
உண்மை கதையை அடிப்படையாக வைத்து ஜெய்பீம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அனிருத் இசையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். போலி என்கவுன்டர்கள் மற்றும் கல்வி மோசடி போன்ற பொதுமக்களின் பிரச்சனை வேட்டையன் படத்தில் பேசப்பட்டன. ஜெயிலர் படத்திற்கு பின் அதியன் என்ற ரோலில் ரஜினி மாஸ் காட்டி இருந்தார் சூப்பர் ஸ்டார்.

வேட்டையன்: தைரியமான பெண்ணான துஷாரா மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு ,பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இந்த கொலை குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட குணா(அசல் கோளாறு) 48 மணி நேரத்தில் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுகிறார் ரஜினி.ஆனால், அதன் பிறகு தான் அவன் அப்பாவி என்பதும், அந்த கொடூர கொலையில் அவன் வேண்டும் என்றே சிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டதும் தெரியவருகிறது. இதனால், மனதளவில் மிகவும் பாதிக்கப்படும் ரஜினி உண்மை குற்றவாளிகளை தேடி அலைகிறார்.அதில், பெரியதலைகள் சிக்க அடுத்தடுத்த சுவாரசியங்களுடன் கதை நகர்கிறது.
ஓடிடியில்: ஜெயிலர் படத்தில் ஜெயிலராக தரமான சம்பவத்தை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக மிரட்டி விட்டார். இந்த படம் வெளியான போது தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்துவாங்கியதால், ரெட் அலர்ட் கொடுக்கப்ப்டடது. ஆனாலும் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை, தற்போது வரை வேட்டையன் படம் 250 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.வசூல் சாதனை அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியில் இந்த படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











