ரகுல் ப்ரீத் சிங்கோட அந்த ‘காண்டம்’ படம் எப்போ ரிலீஸ்னு தெரியுமா? டைரக்ட்டா ஓடிடிக்கு வருதாம்!

மும்பை: இந்தியாவில் Sex Education குறித்த படங்கள் வந்தாலே அதையெல்லாம் ஒரு ஆபாச படமாகவே கருதும் மனநிலையை நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் 'Chhatriwali' படம் மாற்றும் என அந்த படக்குழு உறுதியாக உள்ளது.

கன்னடத்தில் கில்லி படம் மூலமாக அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார்.

என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியன் 2 ஹீரோயின்

இந்தியன் 2 ஹீரோயின்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த அயலான் படமும் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் தாமதம்

அயலான் தாமதம்

இந்தியன் 2 மற்றும் அயலான் படங்கள் எடுக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆக ரொம்பவே தாமதம் ஆகிவிட்டது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் இந்த இரு படங்களும் வெளியாக தாமதம் ஆன நிலையில், பாலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

காண்டம் படம்

காண்டம் படம்


ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கத்தில் காண்டம் பரிசோதகராக 'Chhatriwali' எனும் படத்தில் நடிக்கப் போவதாக ரகுல் ப்ரீத் சிங் அறிவித்ததும் சோஷியல் மீடியாவில் டிரெண்டானார். இந்நிலையில், அந்த படம் நேரடியாக ஜி5 ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

செக்ஸ் எஜுகேஷன்

செக்ஸ் எஜுகேஷன்

சத்திரிவாலி திரைப்படத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் அதன் பரிசோதகர் வேலைக்கு சேரும் ரகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் கூச்சப்பட்டு தயங்கியபடி இருக்கும் நிலையில், பின்னர் அதன் அவசியம் மற்றும் தேவையை புரிந்து கொண்டு எப்படி மக்களுக்கு செக்ஸ் எஜுகேஷனில் விழிப்புணர்வு கொடுக்கிறார் என்பதை காமெடியாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த படம் என்கின்றனர்.

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம்

வரும் ஜனவரி மாதம் ஜி5 ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிடப் போவதாக உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படியொரு விழிப்புணர்வு படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என்றும் ஆண்கள் ஆணுறைகளை பயன்படுத்துவது குறித்த போதிய விழிப்புணர்வை அறிந்து கொள்வது அவசியம் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X