முகம் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சி.. ராணா நாயுடு வெப் சீரிசை குடும்பத்தோடு பாக்காதீங்க!
சென்னை : நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ராணா நாயுடு வெப் தொடரை குடும்பத்தோடு பாக்காதீங்க என்று நடிகர் ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.
ரே டோனவேன் என்கிற அமெரிக்க வெப் சீரிஸை தழுவி எடுக்கப்பட்ட இந்திய வெப் தொடர் தான் ராணா நாயுடு.
பத்து எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர் கடந்த வாரம் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

ராணா நாயுடு வெப் தொடர்
இயக்குநர்கள் சுபர்ன் வர்மா மற்றும் கரன் அன்ஷுமான் இயக்கத்தில் உருவான இணையத் தொடர் ராணா நாயுடு. இதில் வெங்கடேஷ், ராணா டகுபதி, சுர்வீன் சாவ்லா, சுசித்ரா பிள்ளை, கௌரவ் சோப்ரா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். பல குழப்பங்கள், பல கேள்விகளுடன் இத்தொடர் தொடங்குகிறது.

ராணா நாயுடு கதை
பிக்ஸராக பணியாற்றும் ராணா மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ராணா நாயுடுவின் தந்தை வெங்கடேஷ் 20 ஆண்டுகளை சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். அவரை நல்லெண்ண அடிப்படையில், 15 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை ஆகினார் நாக நாயுடு, தனது மகன்களுடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். ஆனால், அப்பா மீது தீராத கோபத்தில் இருக்கும் ராணா நாயுடு அவரை கொலை செய்ய சதி திட்டம் போடுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் ராணா நாயுடு வெப் தொடரின் கதை.

கலவையான விமர்சனம்
இந்த படத்தின் மூலம் ராணா ரகுபதி மற்றும் வெங்கடேஷ் முதன் முறையாக வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ராணா டகுபதி தனது கதாபாத்திரம் உணர்ந்து அட்டகாசமாக நடித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேல் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் வெங்கடேஷ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். இந்த தொடர் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

மோசமான ஆபாச காட்சிகள்
அதில் பல காட்சிகளில்18+ அடல்ட் காட்சிகள் மோசமான கெட்ட வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி ட்ரோல் செய்து வருகின்றனர். மக்கள் மனதில் இடம் பிடித்த வெங்கடேஷூம், ராணா டகுபதியும் இதுபோன்ற இணைய தொடரில் நடித்திருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்பது நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

குடும்பத்தோடு பாக்காதீங்க!
இந்நிலையில், இப்படத்தின் நாயகனாக ராணா டகுபதி, தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் நடித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த தொடரை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க முடியாது, இது ஏ சான்றிதழ் பெற்ற 18 பிளஸ் தொடர் என்பதால், தனியாக பாருங்கள் என்றும் ராணா டகுபதி அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











