Rana Naidu Review: ஸ்ட்ரிக்ட்லி 18 பிளஸ்.. ராணா டகுபதிக்கும் வெங்கடேஷுக்கும் என்ன ஆச்சு?
சென்னை: ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் நடிச்சிருக்காங்களே ரொம்ப ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸா இருக்கும் என நெட்பிளிக்ஸில் ராணா நாயுடு வெப்சீரிஸை குடும்பத்துடன் பார்த்தவர்கள் நிலைமை அய்யோ அம்மா வலிக்குதே என அடிதடியில் முடிந்து விட்டதாக நெட்டிசன்கள் கழுவி கழுவி சோஷியல் மீடியாவில் ஊற்றி வருகின்றனர்.
நெட்பிளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் செம காஸ்ட்லியாக இருக்க காரணமே அதில் ஏகப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்கள் இருப்பது தான்.
இந்நிலையில், நெட்பிளிக்ஸில் தற்போது வெளியாகி உள்ள ராணா நாயுடு வெப்சீரீஸும் ஆபாசத்தை தவிர்த்து கதைப்படி ஒரு கன்றாவியும் இல்லை என விமர்சனங்கள் குவிந்துள்ளன.

ராணா நாயுடு வெப்சீரிஸ்
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் நடித்துள்ள ராணா நாயுடு வெப்சீரிஸ் தற்போது வெளியாகி உள்ளது. கரண் அன்சுமான் மற்றும் சுபர்ன் வர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸ் 18 பிளஸ் வெப்சீரிஸாக உள்ளதாக நெட்டிசன்கள் #RanaNaidu ஹாஷ்டேக்கில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஓவர் ஆபாசம்
நெட்பிளிக்ஸில் உள்ள பல படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் அனைத்துமே குடும்பத்துடன் பார்க்கக் கூடியதே இல்லை. இதில், தற்போது தெலுங்கில் வெளியாகி உள்ள ராணா நாயுடு வெப்சீரிஸில் ஓவர் ஆபாசக் காட்சிகள் நிறைந்துள்ள நிலையில், குடும்பத்துடன் பார்க்காதீங்க என ரசிகர்கள் 18 பிளஸ் அடல்ட் அலர்ட் கார்டுகளை போட்டு வருகின்றனர். தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் டப் செய்யப்பட்டு இருக்கிறது. ஷகீலா படம் தியேட்டரில் ஓடிய போதெல்லாம் எதிர்ப்புகள் வெளியாகின. ஆனால், இன்னைக்கு செல்போனிலேயே அதிகாரப்பூர்வமாக ஓடிடி தளங்கள் சென்சார் இல்லாத நிலையில், ஆபாசங்களை இறக்கி வருவதை எதிர்த்து போராட எந்தவொரு மகளிர் சங்கமும் இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குடும்பத்துடன் பார்க்காதீங்க
வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி எப்படி ஒத்துக் கொண்டு இப்படியொரு படு கேவலமான வெப்சிரீஸில் நடித்துள்ளனர். முதல் எபிசோடு முதல் கடைசி வரை ஆபாசக் காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. தயவு செய்து குடும்பத்துடன் பார்க்க வேண்டாம் என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.

செக்ஸ், நியூடிட்டி மட்டும் தான்
ராணா மட்டுமே நல்லா நடிச்சிருக்காரு, குடும்ப பாங்கான ஹீரோவாக இருந்த வெங்கடேஷ் இதில் நடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார். கெட்ட வார்த்தைகள், செக்ஸ் காட்சிகள், நியூடிட்டி மட்டுமே இருக்கு, கொஞ்சம் கூட கதையே இல்லாமல் சதையை நம்பி எடுத்துள்ள இந்த வெப்சிரீஸ் அட்டர் ஃபிளாப் என நெட்டிசன்கள் ஒரே ஒரு ரேட்டிங் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ரே டோனாவன் ரீமேக்
ஆங்கிலத்தில் அதே நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கும் ரே டோனாவன் வெப்சீரிஸின் படு கேவலமான ரீமேக் தான் இந்த வெப்சீரிஸ் என்றும் அந்த வெப்சீரிஸ் 7 சீசன்களை கடந்து பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது. ஆனால், இந்த வெப்சீரிஸ் முதல் சீசன் முதல் எபிசோடையே பார்க்க சகிக்கவில்லை. ஆபாசமான காட்சிகள் இருந்தாலும், திரைக்கதை, நடிப்பு உள்ளிட்ட விஷயங்கள் நல்லா இருந்திருந்தா எல்லாரும் ரசிச்சிருப்பாங்க, இங்கே அதுவும் இல்லை என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











