நெகட்டிவ் விமர்சனத்துடன் ஹிட்டடித்த அனிமல்.. நீக்கப்பட்ட 8 நிமிட காட்சியை ஓடிடியில் பார்க்கலாம்!

சென்னை: அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர், ட்ரிப்டி டிம்ரி, சக்தி கபூர் மற்றும் பிரேம் சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 1ந் தேதி வெளியான அனிமல் திரைப்படத்தை அப்பா மகன் மற்றும் ஒரு கேங்ஸ்டர் கதையாக கொடுத்துள்ளார் இயக்குநர். தன்னுடைய தந்தை மீது மகன் ஒருவன் அதிக பாசம் வைத்திருக்கிறார். இவர் தன்னுடைய தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வதே படத்தின் கதை. இதில் மகனாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அவருடைய தந்தையாக அனில் கபூர் நடித்திருக்கிறார்.

Ranbir kapoors animal OTT release date and platform

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அனில் கபூர், தன்னுடைய மகனை எதற்கெடுத்தாலும் பயங்கரமாக திட்டுகிறார். தந்தை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவர் மீது அதிக அன்பை கொட்டுகிறார் ரன்பீர் கபூர். தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

கடும் விமர்சனம்: அனிமல் படம் முழுக்க ஆண் சிந்தனை இருப்பதாகவும்,பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. அதோடு படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஒரு கிளாமர் ரோலுக்காகவே அவரை பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும், அவரின் லிப் லாக் காட்சி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. இவருடைய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பாலிவுட்டிற்கு சென்ற ராஷ்மிகா படு மோசமாக ஆகிவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் கழுவி ஊற்றினார்கள்.

Ranbir kapoors animal OTT release date and platform

வசூலை அள்ளி அனிமல்: அனிமல் படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனம் வந்த போதும், இப்படம் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலாகி ரன்பீர் கபூர் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக மாறி உள்ளது. இதன் வெற்றிவிழா கடந்த வாரம், மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட், நடிகர் அனில் கபூரும், உபேந்திர லிமாயே, தயாரிப்பாளர் பூஷன் குமார், நடிகர் பிரேம் சோப்ரா,கரன் ஜோகர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், தமன்னா ஆகியோர் கலந்து கொண்டார்.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில் அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இந்த படத்தில் எட்டு நிமிட காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், அந்த காட்சி எந்தவிதமான கட்டும் இல்லாமல் Netflix ஓடிடி தளத்தில் ஜனவரி 26ந் தேதி பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X