Animal OTT Release: நெட்பிளிக்ஸில் வெளியாகும் அனிமல்... OTT ரசிகர்கள் வெயிட்டிங்... அப்டேட் இதோ
சென்னை: இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் டிச. 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படம் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வரை வசூலித்த இந்தப் படம், தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
ஓடிடியில் வெளியாகும் அனிமல்
சில ஆண்டுகளாகவே பாய்காட் பிரச்சினையில் சிக்கித் தவித்த பாலிவுட் இண்டஸ்ட்ரி, கடந்தாண்டு தான் கொஞ்சம் பெரு மூச்சு விட்டுள்ளது. ஷாருக்கானின் பதான், ஜவான், டங்கி படங்கள் மொத்தம் 2500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்த வரிசையில் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படமும் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரன்பீருடன் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். டிசம்பர் 1ம் தேதி வெளியான அனிமல் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் விமர்சன ரீதியாக நெகட்டிவாக பல கமெண்ட்ஸ்கள் வெளியாகின. அதிகளவில் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
இதுகுறித்து பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியரும் மூத்த திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் கூட பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார். அதேபோல், ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச காட்சிகளும் சர்ச்சையாகின. இருப்பினும் அனிமல் படத்துக்கு இப்போது வரை ரசிகர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. அதனால் தான் ஓடிடி ரிலீஸ் தேதியையும் தாமதப்படுத்திக் கொண்டே போனது படக்குழு.
இந்நிலையில், தற்போது அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் (ஜன) 26ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதனால் ஓடிடி ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். திரையரங்குகளில் அனிமல் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள் இப்போது ஓடிடியில் பார்க்க அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பிரபாஸின் சலார் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ரன்பீர் கபூரின் அனிமல் படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதனால் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்கள் செம்ம மஜாவாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











