மாபியா கேங்கை வேட்டையாடும் அவினாஷ்.. இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன் 2.. ஓடிடி விமர்சனம்!

சென்னை: இயக்குநர் நீரஜ் பாதக் இயக்கத்தில் ரந்தீப் ஹூடா, ஊர்வசி ரௌடேலா, அமித் சியல், அபிமன்யு சிங், ஷாலின் பானோட், ரஜ்னீஷ் துக்கல் மற்றும் ஃப்ரெட்டி தருவாலா ஆகியோர் நடித்து இருக்கும் வெப் தொடர் தான் "Inspector Avinash Season 2". உத்தரப் பிரதேசத்தில் பணியாற்றிய பிரபல என்கவுன்ட்டர்ஸ்பெஷலிஸ்ட் 150 என்கவுன்டர்களை செய்த அவினாஸ் மிஷ்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் அவினாஷ் சீசன் 2: 10 எபிசோடுகள் கொண்ட இந்த"Inspector Avinash Season 2"வின் கதை ஆரம்பிக்கும் போது, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவினாஷ் பெரிய சவால்களுடனும், மன அழுத்தங்களுடன், மாபியா உலகத்துடன் ஆயுத கடத்தல் கும்பலை வழிநடத்தும் ஷேக் (அமித் சியல்) மற்றும் தேவி (அபிமன்யு சிங்) ஆகியோரை எதிர்கிறார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட்டு மகன் சிறைக்கு சொல்ல மனைவி பிரிந்து செல்கிறார். இப்படி அடுத்தடுத்த பிரச்சனையில் சிக்கும் அவினாஷ் மிஸ்ரா மாபியா கேங்கை அழித்தாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

OTT Webseries OTT
Photo Credit:

மைனஸ்: பல க்ரைம் திரில்லர் கதைகளை பார்த்துப்பழகிய நமக்கு இந்த தொடர் அலுப்பை தருகிறது. அதோடு அந்த தொடரின் பெரிய பலவீனமே திரைக்கதை தான். வசனங்கள் பல இடங்களில் பழைய பாணியில் உள்ளன. குறிப்பாக, ரந்தீப் ஹூடா பேசும் சில மாஸ் வசனங்கள் கேட்பதற்கே எரிச்சலாக இருந்தது. அதேபோல கதைக்கு தேவையே இல்லாத கதாபாத்திரம் எதற்காக வருகிறார்கள் என்று நினைவுக்கும் அளவிற்கு திரைக்கதையில் சுவாரசியமே இல்லை.

பிளஸ்: வெப் தொடரில் சில குறைகள் இருந்தாலும், நடிகர்களின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. அவினாஷாக நடித்து இருக்கும் ரந்தீப் ஹூடா மொத்த கதையையும் தனது தோள்களில் சுமந்துள்ளார். அதிரடி சண்டை காட்சிகள், உணர்ச்சி வசப்படுவது என அனைத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். அவினாஷின் மனைவியாக நடித்து இருக்கும் ஊர்வசி ரௌடேலா மற்றும் வில்லன் அபிமன்யு சிங் ஆகியோரின் நடிப்பு இந்த வெப் தொடருக்கு கூடுதல் பலமாக உள்ளது. க்ரைம், த்ரில்லர் ரசிகர்களுக்கு இந்த வெப் தொடர் நிச்சயமாக பிடிக்கும். தற்போது இந்த வெப் தொடரை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

Read more about: webseries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X