என்னடா ஆதிபுருஷ் பிரபாஸ் மாதிரி மாத்திட்டீங்க.. ஓடிடியில் வெளியான துரந்தர்.. விளாசும் ரசிகர்கள்!

சென்னை: ஆதித்யா தர் தனது பெயரை செம லாவகமாக துரந்தர் பட டைட்டில் இறுதியில் வைத்து சம்பவம் செய்தது போல படம் முழுக்க ஏகப்பட்ட தரமான சம்பவங்களை செய்துள்ளார். இந்திய ராணுவம் நடத்திய சீக்ரெட் ஆப்ரேஷனையே வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிக வயலென்ஸ் இருக்கும் துரந்தர் படத்திற்கு எல்லாம் ஏ சான்றிதழ் கொடுத்து ரிலீஸ் பண்றீங்க, எங்க ஜனநாயகன் படத்துக்கு சர்டிபிகே ஏன் தரமாட்டேங்கிறீங்க என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

துரந்தர் படத்தை தியேட்டரில் மிஸ் செய்து விட்டேனே என ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க, தியேட்டரில் பார்த்த ரசிகர்கள், என்ன பழக்கம்ணே என நெட்பிளிக்ஸை அதன் கலர் கிரேடிங் காரணமாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

Ranveer Singh fans roasts Netflix for Dhurandhar color grading at OTT

தியேட்டரில் துரந்தர் படத்தின் தரம் ரொம்பவே சூப்பராக இருந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஏன் சில காட்சிகளை நீக்கியும் அதன் கலர் கிரேடிங்கை ரொம்பவே டல் அடித்தும் வெளியிட்டுள்ளது என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

ஓடிடியில் துரந்தர்: புஷ்பா 2 படம் போல டிசம்பர் 5ம் தேதி வெளியான துரந்தர் திரைப்படமும் 1000 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. ரன்பீர் கபூர் அனிமல் படத்தின் மூலம் 900 கோடி வசூலை ஈட்டிய நிலையில், ரன்வீர் சிங் தன்னோட வெயிட்டை காட்டுறேன் என 1000 கோடி வசூலை அடித்து தூக்கியுள்ளார். அடுத்து துரந்தர் 2 படத்தின் மூலம் இன்னொரு 1000 கோடி வசூலை இப்பவே புக் செய்து வைத்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ரன்பீர் கபூர் ராமாயணா படத்தை இறக்க உள்ள நிலையில், பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் இவங்க ரெண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று படம் வெளியாகி ஓடிடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

காண்டான ரசிகர்கள்: தமிழ், தெலுங்கு என பான் இந்தியா அளவில் மற்ற முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள நிலையில், பலரும் படத்தை பார்த்து வருகின்றனர். ஆனால், தியேட்டரில் இருந்த பிக்சர் குவாலிட்டி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இல்லை என்றும் இதுக்குத்தான் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் நெட்பிளிக்ஸை ரோஸ்ட் செய்து வருகின்றனர். துரந்தர் 2 படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X