Dhurandhar 2 OTT: மரண மாஸ் ஹிட்டான துரந்தர் 2.. ஓடிடியில் ரிலீஸ்.. எப்போ?.. எதில் தெரியுமா?

சென்னை: இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன் நடித்த 'Dhurandhar: The Revenge' படம் மார்ச் 19ந் தேதி வெளியாகி ₹1,793 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது. தற்போது இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

துரந்தர் 2: ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் படத்தின் முதல்பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று உலகளவில் 1300 வரை வசூலித்தது. இதையடுத்து துரந்தர் 2 வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகள் பல மடங்கு அதிகமாக இருந்தது. ரகசிய மிஷன், அரசியல் சதிகள், தேச பாதுகாப்பை மையமாகக் கொண்ட திருப்பங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது.

Ranveer Singh Dhurandhar 2 OTT 2 OTT
Photo Credit:

துரந்தர் 2 ஓடிடி: உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்த துரந்தர் 2 இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஜூன் 4ம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி வருகிறது. சென்சார் செய்யப்பட்ட சில வசனங்கள், நீக்கப்பட்ட அதிரடி காட்சிகள் மற்றும் கூடுதல் காட்சிகளுடம் சுமார் 3 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் அன்கட் வெர்ஷனாக வெளியாக உள்ளது. தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்டவர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

குவிந்த பாராட்டு: துரந்தர் முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் பல காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் ஓவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டும் என்றும் ஆதித்யா தார் பாக்ஸ் ஆபிஸின் மன்னன் . ஜெய் ஹிந்த் என கூறியிருந்தார். திரையரங்குகளில் வசூல் சாதனைகளை புரட்டிப்போட்ட 'துரந்தர்: த ரிவெஞ்ச்' தற்போது ஓடிடியிலும் புதிய சாதனைகளை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Read more about: ranveer singh Dhurandhar 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X