Thamma OTT: காட்டேரியாக ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தம்மா‘.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: ரஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குர்ரானா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் இணைந்து நடித்த "தம்மா" திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். திகில் மற்றும் நகைச்சுவை கலந்து உருவான இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

டிவி சேனலில் வேலை பார்க்கும் ஆயுஷ்மான் குரானா காட்டில் ராஷ்மிகா மந்தனா சந்திக்கிறார். அப்போது அங்கு வரும் கும்பல் குரானாவை கடத்தி கொண்டு செல்கிறது. அந்த கும்பல் பேதால் என்ற மனித இனமாக அல்லாத இரத்த காட்டேரி ஆவர். அவர்கள் குகைக்குள் மாய சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் யாக்ஷாசனுக்கு உணவாக்க குரானாவை கடத்தி கொண்டு செல்கிறார்கள். அந்த யாக்ஷாசன் குரானவின் இரத்தத்தை குடிக்க முற்பட, அங்கு வரும் ராஷ்மிகா அவரை காப்பாற்ற இருவரும் காட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிடுகின்றனர்.

Rashmika mandana Thamma OTT
Photo Credit:

தம்மா திரைப்படத்தின் கதை: பின் ஆயுஷ்மான் குரானா தனது பெற்றோரிடம் ராஷ்மிகாவை அழைத்து என்று சென்று, இவள்தான் என் உயிரை காப்பாற்றினாள்; இனி நம்முடன்தான் இங்கேயே இருக்கப் போகிறாள் கூறுகிறான். ஒரு கட்டத்தில், குரானாவிற்கு ராஷ்மிகாவும் இரத்த காட்டேரி என்பது தெரிய வருகிறது. அதே சமயம் பல ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் யாக்ஷசன் காட்டை விட்டு வெளியே வந்து, குரானா , ராஷ்மிகாவை தேடுகிறது. அந்த யாக்ஷன் கையில் இருவரும் சிக்கினார்களா? இல்லையா? ஆயுஷ்மானுக்கு ராஷ்மிகாவினால் என்ன ஆகும், அவர் எப்படி இரத்த காட்டேரியிடம் இருந்து தப்பிப்பார் என்பது தான் தம்மா படத்தின் கதை.

ஓடிடி ரிலீஸ் தேதி: தீபாவளி பாண்டிகைக்க தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் நல்ல வசூலை அள்ளி, பலரின் பாராட்டை பெற்றது. தற்போது, இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படத்தை திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் அல்லது மீண்டும் பார்ப்ப விரும்புவர்கள் டிசம்பர் 16ந் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் பார்க்கலாம். மேலும், டிசம்பர் 2ம் தேதி முதல் நீங்கள் இதை பணம் செலுத்தியும் பார்க்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X