The Girlfriend OTT: ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான 'தி கேர்ள் பிரண்ட்' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினரிடையே பேசுபொருளாகவும் மாறியது. காதல், உணர்ச்சி, நவீன உறவுகளின் உண்மையான முகத்தை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது. இத்திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீரஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளன. இதில், ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். மேலும், ராகுல் ரவீந்திரன், ராவ் ரமேஷ், அனு இமானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Rashmika Mandanna The Girlfriend OTT
Photo Credit:

படத்தின் கதை: சிறு வயதிலேயே தாயை இழந்த ராஷ்மிகா தந்தையினால் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படுகிறாள். மேல்படிப்பிற்காக வெளியூர் செல்லும் ராஷ்மிகா, தனது கல்லூரியில் படிக்கும் தீக்‌ஷித் ஷெட்டியை காதலிக்கிறாள். வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வரவேண்டும், என்ற கனவுடன் இருக்கும் ராஷ்மிகாவின் ஆசையை தடுக்கிறார் காதலன் தீக்‌ஷித் ஷெட்டி. இந்த காதல் ஒரு கட்டத்திற்கு மேல் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பாகி விட்டதால், எதிர்காலம் என்னவாகும் என யோசிக்கும் ராஷ்மிகா. காதலை மறந்துவிட்டு, தான் விரும்பிய வாழ்க்கை வாழ நினைக்கிறாள். ஆனால், காதலன் ராஷ்மிகா விடாது துரத்தி, துன்புறுத்துகிறார், அதிலிருந்து அவள் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் 'தி கேர்ள் பிரண்ட்' திரைப்படத்தின் கதை.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்த காலத்து இளம் தலைமுறையினரின் மனம் கவர்ந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறிவிட்ட ரசிகர்கள் படம் எப்போது ஓடிடிக்கு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது, ஓடிடி தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 'தி கேர்ள் பிரண்ட்' திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கியமான படம்: இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்தவர்கள் மட்டுமல்லாமல், தவறவிட்டவர்கள் கூட இப்போது வீட்டிலிருந்தபடியே இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் இயக்கம், நடிப்பு, இசை, காட்சி அமைப்பு ஆகியவை பலராலும் பெரிய அளவில் பாராட்டு பெற்றதால், ஓடிடி தளத்திலும் இது மீண்டும் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் சாதனை படைத்த, 'தி கேர்ள் பிரண்ட், டிசம்பரில் ஓடிடி உலகின் முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X