Girl Friend OTT: ராஷ்மிகா மந்தனாவின் கேர்ள் பிரண்ட் ஓடிடி ரிலீஸ் தேதி சொல்லியாச்சு.. எப்போ தெரியுமா?

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கேர்ள் பிரண்ட். இந்த படம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் தியேட்டர் வசூலில் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா நடித்த "தி கேர்ள் பிரண்ட்" படம் ரிலீஸ்க்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா மந்தனா நடிக்கும் கதாநாயகி செண்ட்ரிக் படங்களுக்கு பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் கேர்ள் பிரண்ட் படத்திற்கும் படக்குழுவும் அதற்கு இணையாக மிக பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது. ராஷ்மிகா மந்தனா மிகவும் ஆர்வமாக படத்தின் புரோமோசன்களில் கலந்து கொண்டு வந்தார்.

Rashmika Mandhanna The Girl Friend Movie OTT Release On Netflix From December 5
Photo Credit:

குறிப்பாக புரோமோசன்களின் போது பேசுகையில், இது தன் சொந்த வாழ்க்கை கதை என்பது போல் ராஷ்மிகா மந்தனா பேசினார். தன் முன்னாள் காதலரான ரக்ஷித் ஷெட்டிக்கு எதிராக மறைமுகமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "என் வாழ்க்கையில் விஜய் தேவரகொண்டா வந்தது என் அதிர்ஷ்டம்" என்றும், "ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் விஜய் தேவரகொண்டா போன்ற ஒருவர் இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாக்ஸ் ஆபீஸ் தோல்வி: ராஷ்மிகா பேசிய இந்த வார்த்தைகளைக் கேட்ட பலரும், "தி கேர்ள் பிரண்ட்" உண்மையில் ரஷ்மிகா மந்தனாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் கதை என்று நம்பினர். இந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்றும் எதிர்பார்த்தனர். குறிப்பாக விஜய் தேவர கொண்டாவின் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் பாக்ஸ் ஆபீஸ்களில் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. படம் வணிக ரீதியாக தோல்விப் படமாக மாறியுள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதி: சுமார் 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபீஸில் வெறும் ரூபாய் 18 முதல் ரூபாய் 22 கோடிகள் வரை மட்டுமே வசூலித்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகிறது. இப்படி இருக்கும்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது "தி கேர்ள் பிரண்ட்" படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் "நெட்ஃப்ளிக்ஸ்" தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X