ராட்சசன் இந்தி ரீமேக்.. அக்‌ஷய் குமாருக்கு கை கொடுக்குமா? நேரடி ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

மும்பை: விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழில் வெளியான ராட்சசன் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

தென்னிந்திய படங்கள் மற்றும் அதிகமான தமிழ் படங்களை தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் ரீமேக் செய்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கில் நடித்திருந்த அக்‌ஷய் குமார் தற்போது ராட்சசன் படத்தின் ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

கொலையை நடுங்க வைத்த படம்

கொலையை நடுங்க வைத்த படம்

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் 2018ல் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களின் கொலையையே தியேட்டரில் நடுங்க வைத்தது. சைக்கோ த்ரில்லர் படமாக வெளியான அந்த படத்திற்கு இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உருவாகி இருக்கிறது.

தமிழ் படங்களும் அக்‌ஷய் குமாரும்

தமிழ் படங்களும் அக்‌ஷய் குமாரும்

தென்னிந்திய படங்களை பாலிவுட் ரீமேக் செய்து வரும் நிலையில், தமிழ் படங்களை ரீமேக் செய்து நடித்து வருகிறார் அக்‌ஷய் குமார். வருஷத்துக்கு 4 முதல் 6 படங்களில் எப்படித்தான் நடித்துத் தள்ளுகிறாரோ தெரியவில்லை. ஜிகர்தண்டா படத்தை பச்சன் பாண்டே என ரீமேக் செய்து நடித்திருந்தார். ராட்சசன் ரீமேக் ரிலீசாக போகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் 2.0 படத்தில் நடித்ததற்கு பிறகு இந்த ஞானோதயம் அவருக்கு பிறந்ததா என்று தெரியவில்லை.

கட்புட்லி

கட்புட்லி

கட்புட்லி என வித்தியாசமான டைட்டிலை படத்திற்கு வைத்துள்ளனர். கைப்பாவை என்பது தான் அதற்கு அர்த்தமாம். இந்த படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒரு நல்ல விலைக்கு தள்ளி விட்டு விட்டார் போல அக்‌ஷய் குமார். வரும் செப்டம்பர் 2ம் தேதி நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்சசன் படத்தில் அமலா பால் நடித்த நிலையில், அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். ராட்சசன் படத்தை பார்க்காத இந்தி ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக செம சீட் எட்ஜ் த்ரில்லர் படமாகவே இருக்கும். பாய்காட் டிரெண்டிங் கலாச்சரத்தால் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டு விட்டாரா என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

டிரைலர் எப்படி இருக்கு

டிரைலர் எப்படி இருக்கு

ராட்சசன் படத்தின் டிரைலரை போலவே இந்த டிரைலரும் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் உள்ளது. அம்மு அபிராமி காரில் இறந்து கிடக்கும் காட்சியை விஷ்ணு விஷால் பார்க்கும் காட்சிக்கெல்லாம் அக்‌ஷய் குமாரின் ரியாக்‌ஷன் சூப்பர். இந்த படத்தின் வில்லன் போர்ஷனை சஸ்பென்ஸாக வைத்தது மற்றும் அந்த ஸ்கூல் சீனில் காமக் கொடூர ஆசிரியரை அந்த இடத்திலேயே மிதிப்பது உள்ளிட்ட காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் அக்‌ஷய் குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X