கர்ப்பமான கணவரின் கள்ளகாதலி.. தாறுமாறாக பழிவாங்கிய மனைவி.. ஓடிடியில் மிரட்டும் தரமான படம்!

சென்னை: இயக்குனர் மனிஷ் குப்தா இயக்கத்தில், கேஜிஎப் புகழ் ரவீனா டாண்டனின் வித்தியாசமான நடிப்பில் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியானத் திரைப்படம் தான் One Friday Night. இத்திரைப்டபத்தில் மிலிந்த் சோமன், விதி சிட்டாலியா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

One Friday Night என்கிற திரைப்படத்தில் லதா என்கிற பெண் மகப்பேர் மருத்துவராக இருக்கிறார். இவருடைய கணவர் வர்மா ஒரு பிசினஸ்மேனாக இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு பல வருடாமாக குழந்தை இல்லை. இதனால வர்மா, நிரோஷா என்கிற ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்க, அந்த பெண் கர்ப்பமடைகிறாள். இந்த விஷயம் லதாவுக்கு தெரியவர, தனது கணவரையும் அவரது கள்ளக்காதலியையும் எப்படி பழி வாங்கினாள் என்பது தான் இந்த திரைப்படத்தினுடைய கதை.

Bollywood Review OTT

One Friday Night: வர்மா பிசினஸ்மேன் என்பதால எப்பவுமே பிஸியாவே இருப்பார். அதே போல லதாவும் மருத்துவர் என்பதால் எப்பவுமே வேலை பார்த்துக்கொண்டே இருப்பார். இதனால இவர்கள் இருவருமே வார இறுதி நாட்களில் தான் சந்தித்துக்கொள்வார்கள். அப்படி தான் ஒரு வார இறுதி நாளில், மனைவி லதாவை சந்திப்பதற்காக காரில் வந்து கொண்டு இருக்கிறார் வர்மா. அப்போது, லதா போன் பண்ண நான் வந்துகிட்டே இருக்கேன் நீ கவலைப்படாதே சீக்கிரமா வந்துடுறேன் என்கிறார்.

Bollywood Review OTT

கர்ப்பமாக இருக்கிறேன்: அதன்பிறகு, டிரைவரிடம் நான் காரை ஓட்டிச் செல்கிறேன் நீ, திங்கட்கிழமை வந்தால் போதும் என சொல்லிவிட்டு டிரைவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுகிறார். பின் வழியில் நிரோஷா என்ற இளம் பெண்ணை ஏற்றிக்கொண்டு, தனது பண்ணை வீட்டுக்கு வருகிறார். அந்த பண்ணை வீட்டில் இருக்கும் வேலைக்காரன் கோவிந்தன் இவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கிறார். அப்போது, நிரோஷா தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை வர்மாவிடம் சொல்ல, அவர் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். இத்தனை வருஷமா எனக்கு குழந்தை இல்லை என்று ஏங்கிக்கிட்டு இருந்தேன், இப்போது, உன் மூலமாக எனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று மகிழ்ச்சி அடைகிறான்.

சண்டை போடும் காதலி: அப்போது நிரோஷா, எத்தனை நாளைக்கு தான், நான் உங்களுடைய கள்ள காதலியாகவே இருப்பது. என்னை முறைப்படி கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிறாள். இதைக்கேட்டு வர்மா இப்போதைக்கு அது முடியாது, இந்த சமூதாயத்தில் எனக்கு என்று ஒரு பெயர் இருக்கு என்று சொல்ல, நிரோஷாவோ, அப்போ நான் இந்த கருவை கலைத்துவிடுகிறேன் என்று சொல்லி சண்டை போட, இது அந்த வீட்டில் இருக்கும் வேலைக்காரன் கோவிந்தின் காதில் விழுகிறது. இப்படி இருவரும் சண்டை போட்டுக்கொண்டு இருக்க, வர்மா கொஞ்ச நாள் பொருத்துக்கோ நிச்சயமாக ஊரறிய உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

தவறி விழுந்த வர்மா: அதன் பின் வர்மா, வேலைக்காரன் கோவிந்தை அழைந்து, நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இதை நான் செலிப்ரேஷன் பண்ண வேண்டும், நீ ஊருக்குள்ள போய் நான் சொல்வதை வாங்கிக்கொண்டு வா என்று, அவரை வெளியில் அனுப்பி வைத்து விடுகிறான். பின் நிரோஷாவும் வர்மாவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருக்க, அப்போது வர்மா கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறான். இதனால், நிரோஷா பதறி போய் என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்க, வர்மாவின் தலையில் அடிபட்டு ரத்தம் வருகிறது. காலும் உடைந்து விடுகிறது.

Bollywood Review OTT

மனைவிக்கு தெரிந்த உண்மை: இதனால், வர்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சுக்கு நிரோஷா போன் செய்ய, அந்த வீட்ல சிக்னல் இல்லாததாலும், வெளியில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்ததாலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. இதனால், நிரோஷா வேறு வழியே இல்லாமல், வர்மாவின் மனைவியான லதாவிற்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, இதை கேட்டு லதா அதிர்ச்சி அடைகிறாள். பின் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தனது வீட்டில் இருந்து பண்ணை வீட்டுக்கு காரில் வருகிறாள். வருகிற அவசரத்தில் ஃபோனை வீட்டிலேயே மறந்துவைத்துவிட்டு வந்துவிடுகிறாள்.

Bollywood Review OTT

வீட்டை விட்டுபோ: சுய நினைவு இன்றி இருக்கும் தனது கணவனுக்கு தேவையான அனைத்து முதல் உதவிகளையும் செய்து அவரை காப்பாற்றுகிறாள். இதன் பிறகு, நிரோஷாவிடம் நீ யார் என்று கேட்க, அப்போது நிரோஷா நானும் வர்மாவும், சில ஆண்டுகளாகவே உறவில் இருக்கிறோம். நான் இப்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்ல இதைக்கேட்டு லதா அதிர்ச்சி அடைகிறாள். உச்சகட்ட கோவத்திற்கு சென்ற லதா, என் கிட்ட அழகு இல்லையா... படிப்பில்லையா.. அறிவில்லையா.. அப்படி இருக்கும் போது வர்மா உன் கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று சொல்வதை என்னால் நம்ப முடியாது, பணத்திற்காக பொய் சொல்றியா மரியாதையா வீட்டை விட்டு வெளியே போக என்று சொல்கிறாள்.

லதா செய்த வேலை: அந்த நேரம் கண் திறக்கும் வர்மா, இந்த ராத்தியில் அவளை வெளியில் அனுப்பினால், அவள் எங்கே போவா, என் வாரிசு அவள் வயிற்றில் வளர்கிறது என்கிறார். கணவரின் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்ட லதா, அவள் போகவில்லை என்றால் என்ன இங்கிருந்து நான் போகிறேன். இதற்கு மேல், இந்த இடத்தில் நான் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. டைவர்ஸ் பேப்பர் அனுப்பி வைக்கிறேன். நீங்க ரெண்டு பேருமே சந்தோஷமா இருங்க என்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பி விடுகிறாள்.

Bollywood Review OTT

கைது செய்யும் போலீசார்: மறுநாள் காலையில் வர்மா இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. அதற்கு காரணம் நிரோஷா தான் என போலீசார் அவளை கைது செய்கின்றனர். நிரோஷாவோ நான் அவரை கொல்லவில்லை என்றும், தவறுதலாக அவர் மாடியில் இருந்து கீழே விழுந்துட்டார் என்றும், இந்த விஷயம் அவரது மனைவிக்கும் தெரியும் என்று சொல்ல, போலீசார் லதாவிடம் விசாரிக்க, அவள் எதுவுமே தெரியாததுபோல பதில் அளிக்கிறாள். பின் வேலைக்காரன் கோவிந்திடம் விசாரணை நடத்த, அவனும், வர்மா சாருக்கும் இந்த பொண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்தது. இதனால், ஏற்பட்ட சண்டையில் இந்த பெண் தான் அவரை கொன்று இருப்பார் என்று சொல்ல, போலீசார் நிரோஷாவை கைது செய்து அழைத்து செல்கின்றர்.

இதையடுத்து, வீட்டில் மெத்தை மீது படுத்து இருக்கும் லதா, தனது கணவர் வர்மாவை தலையணையால் அமுக்கி கொலை செய்ததையும், அங்கிருந்த சிசிடிவி ஆதாரத்தை அழித்ததையும் நினைத்து பார்க்கிறாள். தன்னை ஏமாற்றிய கணவனையும் அவனது கள்ளக்காதலியையும் பழிவாங்கி விட்டார் என்பது தெரியவருகிறது. இந்த திரைப்படத்தை ஜியோஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: bollywood review ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X