ராத்திரி வர முடியுமா.. நடிகரை அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண அழைத்த பிரபல நடிகை.. ஆண்களுக்கும் பிரச்சனை?
மும்பை: சினிமாவில் நடிகைகளை மட்டுமே டார்கெட் செய்து அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை நடைபெற்று வருவதாக பல்வேறு நடிகைகளும் கூறி வரும் நிலையில், சில நடிகர்களும் இது போன்ற சிக்கலில் சிக்கி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சினிமா கனவுகளுடன் வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எங்க படத்தில் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கிறோம் என ஆசைக்காட்டி, கடைசியில் அந்த பிரபல நடிகருடன் படுக்க வேண்டும் என்றோ, அந்த நடிகையின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றோ செக் வைக்கப்படுவதாக ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகராக வலம் வரும் ரவி கிஷனுக்கும் இதுபோன்ற ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தற்போது வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

ரவி கிஷன்
1992ம் ஆண்டு பீதாம்பரி எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். ஏகப்பட்ட பாலிவுட் மற்றும் போஜிபுரி படங்களில் நடித்துள்ள இவர், தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் Casting Couch பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மேலும், அப்படி செய்தது ஒரு பிரபல நடிகை என்றும் கூறியிருப்பது தான் திரைத்துறையையே ஷாக் ஆக்கி உள்ளது.

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை
சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றனர். பெண்களுக்கு மட்டும் தான் சினிமாவில் இது போன்று பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருப்பதாக பார்த்தால் நடிகர்களுக்கும் அதை விட மோசமாக சினிமா ஹீரோயின்களே டார்ச்சர் கொடுப்பதாக திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் ரவி கிஷன்.

நைட் காபி குடிக்க வறீங்களா
ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.

விடவே இல்லை
ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது என்று கூறியுள்ளார்.

பெயர் சொல்ல விரும்பவில்லை
அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம் என ரவி கிஷன் மறுத்து விட்டார். இந்தி பிக் பாஸ் சீசன் 1லும் இவர் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தெரே நாம், டானு வெட்ஸ் மனு உள்ளிட்ட பல பிரபல படங்களில் நடித்த இவர், கடைசியாக நெட்பிளிக்ஸில் வெளியான Khakee: The Bihar Chapter வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











