அஜித்தின் துணிவு தியேட்டர் ரைட்ஸ்… தட்டித் தூக்கிய ரெட் ஜெயன்ட்… இனி ப்ரோமோஷன்ஸ்லாம் தாறுமாறு தான்

சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.

பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டதால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை, ஓடிடி ரைட்ஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

துணிவு தரும் அஜித்

துணிவு தரும் அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் போஸ்டர்களோடு துணிவு டைட்டிலை வெளியிட்ட படக்குழு, படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அஜித்தும் தனது துணிவு படத்தை களமிறக்கவுள்ளார். இதனால், அடுத்தாண்டு பொங்கல் சும்மா தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர் ரைட்ஸ்

தியேட்டர் ரைட்ஸ்

அஜித்தின் துணிவு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அதன் தியேட்டர் ரைட்ஸை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது. இதனால், துணிவு படத்தின் ப்ரோமோஷன் தெறிக்க விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெயன்ட், இப்போது அஜித்தின் துணிவு படத்தையும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி உரிமை

ஓடிடி உரிமை

அதேபோல், அஜித்தின் துணிவு படத்திற்கான ஓடிடி உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது.. அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான 'வலிமை' எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் மோசம் போகவில்லை. அதனால் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'துணிவு' ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. துணிவு படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே போனிகபூர் தயாரித்த 'நேர்கொண்ட பார்வை'. 'வலிமை' படங்களின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியிருந்தது. இந்நிலையில், ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அஜித்தின் துணிவு பட ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாட்டிலைட் உரிமை

சாட்டிலைட் உரிமை

சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ் தளத்துக்கு அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருப்பதால், துணிவு ஓடிடி ரைட்ஸ் ஜீ5 இடம் இருந்து கை மாறியிருக்கலாம் என சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், துணிவு சட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதும் தற்போது உறுதியாகியுள்ளது. தியேட்டர் ரிலீஸ் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் வாங்கிய நிலையில், தொலைக்காட்சி ரைட்ஸ் கலைஞர் டிவி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X