ரீமா கல்லிங்கல் படு போல்டாக நடித்த ‘தியேட்டர்’ படம்.. ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?
திருவனந்தபுரம்: 42 வயதாகும் பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய 'தியேட்டர்' எனும் மலையாள திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தமிழில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' படத்தில் நடிகர்கள் எல்லாம் நடனமாடும் பாடலில் 'ரீமா கல்லிங்கல்' நடனமாடியிருப்பார். அதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு பரத்துக்கு ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தார்.

கடைசியாக ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் சமுத்திரகனி, சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன் நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். மலையாளத்தில் குறிப்பிட்ட கதைகளை தேர்வு செய்து சமீப காலமாக நடித்து வருகிறார்.
தியேட்டர் கதை என்ன?: பாவத்தால் உடல் முழுக்க ஒரு விதமான நோய் பரவ அதற்கு என்ன காரணம், அது எப்படி சரி ஆகிறது என்கிற கருவை கொண்ட 'தியேட்டர்' படத்தில் ரீமா கல்லிங்கல் நடித்திருந்தார். அந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி இந்தியாவில் வெளியானது. Theatre: The Myth of Reality என்கிற படத்தை மலையாள இயக்குநர் சஜின் பாபு இயக்கியுள்ளார். நாளை ஓடிடியில் அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், இப்போதே ரீமா கல்லிங்கல் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறார்.
ஆடையில்லாமல் குளியல்: தியேட்டர் படத்தின் டிரைலரின் ஆரம்ப காட்சியிலேயே பாம்பு இருக்க நாக தேவதையை வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆடையில்லாமல் அரை நிர்வாணமாக அவர் குளிக்கும் காட்சிகளும், உடை மாற்றும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஓடிடியில் அந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தில் இருக்கும் காட்சிகளை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
எந்த ஓடிடியில் பார்க்கலாம்: மனோரமா மேக்ஸ் எனும் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 21ம் தேதி 'தியேட்டர்' திரைப்படம் மலையாளத்தில் வெளியாகிறது. இந்த வாரம் ஓடிடியில் தரமான மலையாள படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். பெண்களுக்கு எதிரான ஆபாச கொடுமைகளை தோலுரித்துக் காட்டும் வகையில் இந்த படத்தின் மையக் கதை அமைந்துள்ளது. மேலும், இந்த வாரம் ஹாட்ஸ்பாட் 2 உள்ளிட்ட ஓடிடி ரிலீஸ்களும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைய காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











