Joe OTT release: 7 வாரம் வெற்றிகரமாக ஓடிய ரியோ ராஜின் ஜோ.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பாவ்யா திரிகா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியான ஜோ திரைப்படம் தொடர்ந்து 7 வாரங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆண்டு பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஓடிடி தளங்களில் தொடர்ந்து நல்ல படங்கள் வெளியாகி வரும் நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு கூட மக்கள் அதிகளவில் தியேட்டருக்குச் செல்லாமல் வீட்டிலேயே குடும்பத்துடன் டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவார்களோ என்கிற அச்சமும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எழுந்துள்ளது.

ஓடிடியில் வரிசை கட்டிய நல்ல படங்கள்: நயன்தாராவின் அன்னபூரணி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடித்த பார்க்கிங் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாகின. சமீபத்தில் நானி நடித்த ஹாய் நான்னா படமும் ஓடிடியில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அனிமல், சலார் மற்றும் ஜோ உள்ளிட்ட படங்கள் வரிசை கட்டி வெளியாக காத்திருக்கின்றன.
பொங்கலுக்கு படையெடுக்கும் படங்கள்: தியேட்டரில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜனவரி 12ம் தேதி டார்கெட் செய்து தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய்சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. அதே போல ஓடிடியிலும் படங்கள் ஜனவரி 12ம் தேதி அணிவகுத்து காத்திருக்கின்றன.

ஜோ ஓடிடி ரிலீஸ்: ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பாவ்யா திரிகா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியான ஜோ திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வாரம் ஜனவரி 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனிமல், சலார்: அதே போல ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் ஜனவரி 12ம் தேதியும் சலார் உள்ளிட்ட படங்களும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











