நோ கூச்சம்! ஆடை இல்லாம ஆண்கள், பெண்கள் சேர்ந்து குளிக்க குளங்கள்! ஜெர்மனியை தோலுரிக்கும் வெப்சீரிஸ்

லண்டன்: நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வெப் சீரிஸ் உலகம் முழுக்கவுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதில் ஆண் பெண் தொடர்பாக இத்தனை காலமாக இருக்கும் கருத்தாக்கங்களை உடைக்கும் காட்சிகள் உள்ளன. இப்படியும் கூட சில நாடுகளில் கலாச்சாரம் உள்ளதா என்று வாயை பிளக்க வைத்துள்ளது அந்த வெப் சீரிஸ். பெயர், Risqué Business: The Netherlands and Germany.

இதில் மொத்தம் 6 எபிசோட்கள் உள்ளன. எல்லாமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. 6 வகையான பாலியல் கட்டுடைத்தல்கள் இதில் நிகழ்ந்துள்ளன. நம்மூரில் மேடை கச்சேரி டான்ஸ் ஆபாசமாக இருந்தாலும் எப்படி குடும்பத்தோடு பார்ப்பார்களோ அப்படி, ஜெர்மனியில் நிர்வாணமாக ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் காட்சியை டிக்கெட் போட்டு காட்டுவதாக முதல் எபிசோட் ஆரம்பிப்பது முதல், ஒரே வீட்டில் இரு கணவர்கள் ஒரு மனைவி, அதே மாதிரி, இரு மனைவி ஒரு கணவர் என்று வாழ்க்கை நடத்துவதை கடைசி எபிசோடில் காட்டுவது வரை அத்தனையும் நம்மூர் ரசிகர்களுக்கு ஆச்சரியம்தான்.

Risqué Business: The Netherlands and Germany, Episode 2, A Mixed-Gender Spa Adventure Review in Tamil

வெப்சீரிஸின் தலைப்புக்கு ஏற்ப, இது ஜெர்மனி மற்றும் நெதர்லாந்திலுள்ள கலாச்சாரம் உலகின் பிற நாடுகளைக் காட்டிலும் வித்தியாசமாக உள்ளது என்பதை நிரூபிக்க முயன்றுள்ளது. பிற நாடுகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தாலும் இவ்விரு நாடுகளிலும் இது பொதுப் புத்தியில் சகஜமாகியுள்ளது என்பதை நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக வரும் 2 கொரியர்களும் (பிரபல காமெடி நடிகர்களான ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங்) அவ்வப்போது எதிரொலிக்கிறார்கள்.

ஓகே, இப்போ Risqué Business: The Netherlands and Germany season 1, Episode 2 பற்றி பார்க்கலாம். எபிசோட் 2 முழுக்க முழுக்க ஒரே நீச்சல் குளத்தில் ஆண்களும் பெண்களும் ஆடையின்றி குளிப்பது ஜெர்மனியில் சகஜம் என்பதை காட்டுகிறது. இதன் பெயர்.. A Mixed-Gender Spa Adventure.
நெட்ப்ளிக்ஸ் டீமைச் சேர்ந்த 2 கொரியர்களும், இரு பாலரும் குளிக்கும் ஒரு நீச்சல் குளம் அமைந்துள்ள இடத்திற்கு போகிறார்கள். அங்கு பார்த்தால், வயது வித்தியாசம் இல்லாமல், ஆண்களும், பெண்களும் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் சேர்ந்து குளித்தபடி உள்ளார்கள். நெட்ப்ளிக்ஸ் டீமுக்குதான் வெட்கம் பிய்த்துக்கொண்டு வந்ததே தவிர, குளிப்பவர்களுக்கு இல்லை. ஆர்வத்தோடு அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறது இந்த டீம்.

"ஆமா.. இப்படி பிறந்த மேனிக்கு இருக்கீங்களே நீங்கல்லாம் புருஷன் பொண்டாட்டியா.." என கேட்டால், பதில் அதிர்ச்சி ரகம். "அதெல்லாம் இல்லைங்க, இவன் என் ஃப்ரண்ட்தான். என் லவ்வர் இங்கே வரல. ஆனா, நான் இவன் கூட இங்க குளிக்க வந்ததை என்னோட லவ்வர் கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன்.." என்று அந்த இளம் பெண் சொன்னதும், கேட்ட நம்ம கொரியாக்காரருக்கு தலை சுற்றி குளத்தில் விழப்பார்த்தார்.

"ஏங்க.. எங்க ஊர்லல்லாம் பொண்டாட்டிய எட்டி பார்த்தாலே வெட்டுவாங்கங்க.." என்ற ரீதியில் அவர் சொல்ல.. "நல்ல ஊருதான் போங்க.." என கொல்லென சிரித்தது அந்த ஜோடி. இந்த பொண்ணுக்குதான் வெட்கமே இல்லை, நீங்களாவது சொல்லுங்க, "இதெல்லாம் தப்புங்க" என விடாப்பிடியாக அந்த வாலிபரை கேள்வியால் வளைத்த ஷின் டோங்-யுப்புக்கு அடுத்து பேரதிர்ச்சியே காத்திருந்தது.

"அட நீங்க வேற.. போன வாரம், என்னோட ப்ரண்ட் அம்மாவை கூட்டிட்டே நான் இங்க குளிக்க வந்திருக்கேன், இருவரும் நிர்வாணமாக குளித்து என்ஜாய் செய்தோம். இவளை கூட்டி வந்ததை போய் பெருசா பேசிட்டு இருக்கீங்களே.." என்று சொன்ன அந்த வாலிபர், தம்பிகளா கொஞ்சம் அங்க போய் கோலி விளையாடுங்க என்பதை போல கொரியர்களை பார்த்தார். இதைக் கேட்டதும், "எங்களை மாதிரி ஆசியா நாடுகள்லலாம் இப்படி.." என்று பேசத் தொடங்கிய கொரியர்கள் இருவருக்கும் அதற்கு மேல் பேச்சு வரவில்லை. தொண்டையே அடைத்துக்கொண்டது.

ஏங்க விஷயம் இவ்ளோதாங்க.. நாங்க நிர்வாணத்தில் சுதந்திரத்தை பார்க்கிறோம்.. இதில் உடலுறவு எண்ணத்தை நாங்கள் கலக்கவில்லை. குளிக்கும்போது கூட அடுத்த ஜோடிகளை ஆபாச கோணத்தில் பார்க்க மாட்டோம். எனக்கு மூடு வந்தா கூட என்னப்பா உன்னோட லவ்வர் கூட சில பல கசமுசாக்கள் நடந்திருச்சி, அவளும் என்ஜாய் பண்ணான்னு என் ப்ரண்ட்டுகிட்ட சொல்லிப்பேன். அவனும் கண்டுக்க மாட்டான். இதே மாதிரி, என்னோட லவ்வரும் அவ விரும்புன ஆண் கூட உறவு வச்சிக்கலாம். இதுல அவுங்க அவுங்க தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்குறதுதான் விஷயமே. மற்றபடி ஆபாச எண்ணம் யாருக்குமே கிடையாது.. என்று மூச்சுவிடாமல் அந்த இளைஞர் பேசியதை பார்த்த கொரியர்கள், ஆளைவிடுங்கப்பா என்றபடி ஓட்டம் பிடிக்கின்றனர்.

இதுதாங்க எபிசோட் 2ன் சாராம்சம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடை மாற்றும் அறையும் ஒன்றுதான், கழிவறையும் கூட ஒரே இடத்தில்தானே தவிர தனித்தனி கிடையாதாம். ஜெர்மனி, நெதர்லாந்து கலாச்சாரத்தை அறிய விரும்பினால், வீட்டில் தனியாகவோ, மனைவியோடோ பாருங்க, ஆனால் குழந்தைகளுக்கு நோ அனுமதி ப்ளீஸ். ஏன்னா, கீழே மட்டும் லைட்டா ப்ளர். மேலே ஃபுல் ஓபன் என்று பரந்த மனதோடுதான் காட்சியமைப்புகள் உள்ளன. அப்புறம் கண்ணு கெட்டுப் போச்சுன்னா, கம்பெனி பொறுப்பில்லைங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X