ஓடிடியில் வெளியான சொர்க்கவாசல்.. ஒருத்தரும் கண்டுக்கல.. பாவம்பா ஆர்.ஜே.பாலாஜி!

சென்னை: பல திறமைகளை கொண்டவரான ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் சொர்க்கவாசல். இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்க, அதில், செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.

1999 சென்னை மத்திய சிறையில், ரவுடி பாஸ்கர் வடிவேலுவின் மரணம் அதை தொடர்ந்து, சிறைச்சாலையில் நடந்த கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு சொர்க்கவாசல் படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில், சிறைச்சாலையில், சிகா என்ற ரவுடி, சிறையில் பயங்கரமாக ஆட்டம் போட்டு சிறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். அந்த சிகாவை பார்த்து ஒட்டுமொத்த சிறையும் அலறுகிறது. இந்த சிறைக்கு சூழ்நிலை கைதியாக ஆர்.ஜே.பாலாஜி செல்கிறார். சிறைக்குள் சிகா என்கிற ரவுடி, மற்றொரு பக்கம் அப்பாவி ஆர்.ஜே பாலாஜி இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கிற கதை தான் சொர்க்க வாசல் படத்தின் கதை.

sorgavasal rj balaji

ஏதோ மிஸ்: செல்வராகவன் சிகா என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக செல்வராகவனைப் பார்த்தால் என்ன செய்ய போகிறாரோ என்கிற பயம் வரும் ஆனால், இந்த படத்தில் மொத்த சிறையும் அவரைப்பார்த்து பயந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு அந்த பயம் வரவில்லை. சிகா ரோலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தாலும், அந்த வில்லன் கேரக்டருக்கான அழுத்தம் செல்வராகவனிடம் இருந்து மிஸ் ஆகி விட்டது. அதே போல, இத்தனை ஆண்டுகள் காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே பாலாஜி, புது முயற்சியை எடுத்து இருக்கிறார். ஆனால், அழுத்தமான கேரக்டரில் நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என்று படம் குறித்து பேசிய செய்யாறு பாலு கூறியிருந்தார்.

எடுபடவே இல்லை: ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடி ரூபாயை வசூலித்த நிலையில், பத்து நாட்களில் உலகளவில் ரூ. 6.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வித்தியாசமாக நடித்து இருப்பதால், ஒடிடியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தை யாருமே கண்டுகொள்ளவே இல்லை. ஒருவேளை வரும் விடுமுறை நாட்களில் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X