இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!
சென்னை : இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் அழுத்தமான கதை காலத்தை கொண்டிருக்கும் அதனாலேயே ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.
கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு புதுப்பேட்டை 2,நானே வருவேன்,ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து இயக்க உள்ளார்.
இதுவரை இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் இப்பொழுது நடிகராகவும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் அறிமுகமாக இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலத்திற்கு நின்று பேசும்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் காலம் காலத்திற்கு நின்று பேசும். அந்த அளவிற்கு தொடர்ந்து அழுத்தமான கதைகளை இயக்கிவரும் செல்வராகவனுக்கு முன்னணி ஹீரோக்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே அளவுக்கு இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

விவசாயத்தையும் அரசியலையும்
கடைசியாக சூர்யாவின் என் ஜி கே படத்தை இயக்கியிருந்தார். விவசாயத்தையும் அரசியலையும் ஆணித்தனமாக பேசியிருந்த என் ஜி கே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி ஹிட் அடித்தது. பொதுவாக செல்வராகவனின் திரைப்படங்கள் வெளியாகும் போது சுமாரான வெற்றி பெற்று பின் சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் அருமை அறிந்து ரசிகர்கள் கொண்டாடுவது வாடிக்கையாகி வருகிறது.

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என பல திரைப்படங்கள் ரிலீசான சமயத்தில் வரவேற்ப்பை பெறாமல் சில ஆண்டுகள் கழித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்.

சாணிக் காயிதம்
இவ்வாறு இயக்குனராக வெற்றி வலம் வந்த செல்வராகவன் இப்போது முதன்முறையாக நடிகராக சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தரமணி புகழ் நடிகர் வசந்த், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ராக்கி மூலம் இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.

கேமராவுக்கு முன்னே
இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை கேமராவுக்கு பின்னே மட்டும் இருந்த செல்வராகவன் இப்பொழுது கேமராவுக்கு முன்னே ரசிகர்களுக்கு தோன்ற இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடிப்பதாக கூறப்படுகிறது . முக்கால்வாசி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்துள்ளனர்.

இயக்குவதிலும் கவனம்
என்னதான் நடிகராக செல்வராகவன் அறிமுகமானாலும் படங்களை இயக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக இப்பொழுது ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 உருவாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது.

பேய் படமாக
இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்து நானே வருவேன் என்ற படத்தில் இணைந்துள்ளது இப்படம் பேய் படமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதற்கட்ட பணிகளை செல்வராகவன் தொடங்கியுள்ளார்.

பீஸ்ட் படத்தில் வில்லனாக
சாணிக் காயிதம் திரைப்படத்தில் செல்வராகவன் நடிப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்த இயக்குனர் நெல்சன் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப் படத்திலும் வில்லனாக செல்வராகவனை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்
இதைப் பற்றிய பல தகவல்கள் வந்துகொண்டே இருக்க மிக விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு பீஸ்ட் மற்றும் சாணிக் காயிதம் செல்வராகவன் நடிப்பில் தயாராகி வருகிறது. சாணிக் காயிதம் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு படக்குழு எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வருகிறது.

ஓடிடி தளத்தில்
இந்த நிலையில் சாணிக் காயிதம் ஓடிடி குறித்த முக்கிய தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரும் நிலையில் முன்னணி நிறுவனங்கள் பலவும் சாணிக் காயிதம் படத்தை வாங்க போட்டி போட்டுக் கொண்டு உள்ளது. இறுதியாக அமேசான் நிறுவனம் சாணிக் காயிதம் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது.

அமேசான் நிறுவனம்
மேலும் இப்படத்தை அதிக விலை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து தயாரிப்பு பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இப்படத்திற்கு ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் சாணிக் காயிதம் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











