செல்வ ராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணிக் காயிதம் ரிலீஸ் தேதி... லேட்டஸ்ட் தகவல்!
சென்னை : மகாநடி,மிஸ் இந்தியா, பெண் குயின் ,குட்லக் சகி ஆகிய படங்களை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காயிதம் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார்.
இதுவரை இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் சாணி காயிதம் படத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமாகிறார்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடிக்கும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்பொழுது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான படங்களை
இயக்குனர் செல்வராகவன் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் தொடர்ந்து தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். கமர்சியல் படங்களை இயக்காமல் காதல் படங்களை மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறுவதில் ஸ்பெஷலிஸ்ட். புதுப்பேட்டை,மயக்கம் என்ன,ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களையும் கொடுத்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
தென்னிந்தியாவில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார், இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். மகாநடி, பெண் குயின் மிஸ் இந்தியா, குட்லக் சகி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இப்போது சாணி காயிதம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சாணி காயிதம்
இதுவரை இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் முதல்முறையாக சாணி காயிதம் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகிறார். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இப்படத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடிப்பது இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பே சாணி காயிதம் ஓடிடியில் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது வரும் நவம்பர் மாதம் சாணி காயிதம் ஓடிடியில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது . இந்த படத்தை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











