Saiyaara OTT release date: சென்சேஷனல் ஹிட் அடித்த சையாரா.. எந்த ஓடிடியில் எப்போ வருது தெரியுமா?

மும்பை: ஆஹான் பாண்டே மற்றும் அனீட் பத்தா நடிப்பில் வெளியான 'சையாரா' திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி, திரையரங்கிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் மோகித் சூரி இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த காதல் கதை, அழகான காட்சிகள் மற்றும் மனதைக் கவரும் இசையுடன் வெளியாகி, அனைவரையும் கவர்ந்துள்ளது. அஹான் மற்றும் அனீட்டின் இயல்பான நடிப்பும், அவர்களின் கெமிஸ்ட்ரியும் இப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

saiyara ott release

இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்களில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சாவ்வா படம் 600 கோடி வரை வசூல் ஈட்டியது. அந்த படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் 319 கோடி வசூலை இந்த படம் ஈட்டியுள்ளது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் வெளியான கபீர் சிங் படத்தைத் தொடர்ந்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த காதல் படமாக சையாரா மாறியிருக்கிறது.

திரைப்படத்தின் டீசரும், பாடல்களும் வெளியீட்டிற்கு முன்பே பெரும் வைரலானது. வெளியான பிறகு, அதன் நேர்மையான அணுகுமுறை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தைப் பார்த்ததோடு, சமூக வலைத்தளங்களில் படத்தைப் பற்றிய பதிவுகளும், வீடியோக்களும் நிரம்பி வழிந்தன.

ஆஹான் பாண்டே மற்றும் அனீட் பத்தாவின் அறிமுகப் படமான 'சையாரா', பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த காதல் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதன் மூலம், ரசிகர்கள் அடுத்ததாக ஓடிடி வெளியீட்டிற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

நியூஸ்18 தகவல்படி, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சையாரா படத்தின் டிஜிட்டல் உரிமைகளை வாங்கியுள்ளது. எனவே, அஹான்-அனீட்டின் இசை மற்றும் காதல் படமான 'சையாரா' நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, 'சையாரா' திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 12-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகலாம். 'ஓடிடிஃப்ளிக்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்ட இந்தத் தகவலை, யாஷ் ராஜ் பிலிம்ஸ் காஸ்டிங் இயக்குநர் ஷானூ ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.

ரசிகர்கள் 'சையாரா' படத்தை மீண்டும் காண ஆவலுடன் இருந்தாலும், படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X