Salaar OTT Release: அதிரடியாக ஓடிடியில் வெளியாகும் சலார்... பிரபாஸ் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்
சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான சலார் திரைப்படம், கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய சலார், இப்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. எப்போ, எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற அபிஸியல் அப்டேட் இதோ உங்களுக்காக.
ஓடிடியில் வெளியாகும் சலார்
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா ஹீரோவாகிவிட்டார் பிரபாஸ். பாகுபலி கொடுத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் திணறிய பிரபாஸுக்கு, கடந்த மாதம் வெளியான சலார் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்துள்ளது. டிசம்பர் 22ம் தேதி ரிலீஸான சலார் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேஜிஎஃப் படங்கள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த பிரசாந்த் நீல், சலார் படத்திலும் சம்பவம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல், பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியின் முதல் படம் என்பதாலும் அதிக ஹைப் இருந்தது.
கேஜிஎஃப் போலவே பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியானது சலார். இதனால் முதல் நாளில் 178 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 117 கோடியும் வசூல் செய்தது. அதன்பின்னர் கலவையான விமர்சனங்கள் வெளியானதால் சலார் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிறது சலார்.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அதாவது, 20ம் தேதியில் இருந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சலார் திரைப்படம் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் மட்டுமே ஓடிடியில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சலார் படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள், ஓடிடியில் காண ரெடியாகிவிட்டனர். பொங்கல் விடுமுறை முடிந்துவிட்டதால் இனி ஓடிடி தளங்கள் தான் ரசிகர்களின் ஹோம் தியேட்டர் ஆகிவிடும்.
அதன்படி நாளை முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள சலார், ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் சலார் போன்ற பெரிய பட்ஜெட் படங்களே ஓடிடியில் ரிலீஸாகிறதே எனவும் சினிமா விமர்சகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் சலார் இந்தியில் மட்டும் ஏன் வெளியாகவில்லை என்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











