Salaar: சலார் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் 200 கோடியா..? பிரபாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அப்டேட்
ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகிறது.
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.
கடந்த வாரம் 6ம் தேதி வெளியான சலார் டீசர், படம் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சலார் படத்தின் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் குறித்து ஷாக்கிங்கான அப்டேட் வெளியாகியுள்ளது.

சலார் ஓடிடி ரைட்ஸ் அப்டேட்:பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. கேஜிஎஃப் திரைப்படம் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த பிரசாந்த் நீல், முதன்முறையாக பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இதனால் சலார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனும், வில்லனாக பிருத்விராஜ் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சலார் டீசர் கடந்த வாரம் 6ம் தேதி வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த டீசர் ஒரே நாளில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.
அதேநேரம் கேஜிஎஃப் படத்தின் சாயலில் தான் சலாரும் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், கேஜிஎஃப் மாதிரியே சலாரும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படத்திற்குப் பின்னர் சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ் என தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் பிரபாஸுக்கு சலார் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சலார் படத்தின் ஓடிடி ரைட்ஸ் குறித்த அப்டேட், பிரபாஸுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாம். இப்போதெல்லாம் தியேட்டர் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனுக்கு நிகராக ஓடிடி ரைட்ஸ் பிஸினஸும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால், சலார் வெளியாகும் முன்பே அதன் ஓடிடி ரைட்ஸ் குறித்து அதிகம் ஹைப் காணப்பட்டது.

இந்நிலையில், சலார் ஓடிடி ரைட்ஸ் 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் அல்லது நெட்பிளிக்ஸ் இந்த உரிமையை வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட மற்ற மொழிகளின் உரிமை என ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாம். ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
ஷாருக்கானின் ஜவான் ஓடிடி ரைட்ஸ் 200 கோடிக்கு விற்பனையானதாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரபாஸின் சலார் ஓடிடி ரைட்ஸும் 200 கோடிக்கு விற்பனையாகியுள்ளது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேநேரம் சலார் ஓடிடி ரைட்ஸ் 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாகவில்லை என்றும், அதிகமாக 100 முதல் 150 கோடி வரை தான் இருக்கும் எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











