Citadel Honey Bunny Trailer: பிரியங்கா சோப்ரா அம்மாவே சமந்தாவா?.. சிம்ரன் செம என்ட்ரி.. வெப்சீரிஸ்!
மும்பை: நடிகை சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸை தயாரித்தது போல இந்த வெப்சீரிஸையும் தயாரித்துள்ளனர்.
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே மீண்டும் சமந்தாவுடன் இணைந்து இந்த வெப்சீரிஸை உருவாக்கியுள்ளனர். வரும் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள வெப்சீரிஸின் டிரெய்லர் தற்போது வெளியானது.

ஓடிடி ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வெப்சீரிஸ்களை கொடுத்து அசத்தி வரும் இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள சிட்டாடல் வெப்சீரிஸில் ரசிகர்களுக்கு சூப்பரான ஈஸ்டர் எக் மொமண்ட்களும் காத்திருக்கின்றன.

ஓடிடி நாயகி சமந்தா: இந்தியாவில் மற்ற ஹீரோயின்களை விட ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா உள்ளார். பிரியங்கா சோப்ரா நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான சிட்டாடல் வெப்சீரிஸின் இந்திய வெப்சீரிஸாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வெப்சீரிஸின் ப்ரீக்வெலாக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா மற்றும் வருண் தவான் பட்டையை கிளப்பியுள்ளனர்.
பிரியங்கா சோப்ராவுக்கே அம்மாவா?: நடிகை சமந்தாவின் மகளின் பெயர் நாடியா என வைக்கப்பட்டுள்ள நிலையில், சமந்தா மற்றும் வருண் தவானின் மகள் தான் பிரியங்கா சோப்ராவா என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். சிட்டாடல் வெப்சீரிஸ் உலகளவில் ரசிகர்களை ஈர்த்த நிலையில், அதன் ப்ரீக்வெலாக இந்த வெப்சீரிஸ் இருந்தால் ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக் கொண்டிருப்பது கன்ஃபார்ம்.
சிம்ரன் செம என்ட்ரி: நடிகை சிம்ரன் சமீப காலமாக படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இந்த ஆண்டு அரண்மனை 4 படத்தில் கிளைமேக்ஸ் பாடலுக்கு குஷ்புவுடன் இணைந்து ஆட்டம் போட்ட சிம்ரன் அந்தகன் படத்தில் பிரசாந்துக்கு வில்லியாக தனது வேறலெவல் நடிப்பை வெளிக்காட்டி அசத்தியிருந்தார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தில் தபு நடித்த கதாபாத்திரத்தில் சிம்ரன் பக்காவாக நடித்திருந்தார். சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம், சப்தம் உள்ளிட்ட படங்களில் சிம்ரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் ஓடிடி வெப்சீரிஸில் திடீரென சிம்ரன் காரில் இருந்து இறங்கி வரும் மாஸ் என்ட்ரியை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











