சமந்தாவின் சட்டையை கிழித்து.. லிப் லாக் முத்தம்.. சிட்டாடல் ஹனி பன்னி சீன்ஸ் எல்லாம் மோசமா இருக்கே!
சென்னை: ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் சமந்தா படு போல்டாக நடித்தது தான் அவரை நாக சைதன்யா பிரியவே காரணம் என்கிற அளவுக்கு அப்போது கட்டுக்கதைகள் வெளியாகின. மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸை பார்த்தால் ரசிகர்கள் நிச்சயம் ஆடிப்போவது உறுதி.
அந்தளவுக்கு படு போல்டான காட்சிகளில் சமந்தா இந்த வெப்சீரிஸிலும் தாராளம் காட்டி நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா சிட்டாடல் வெப்சீரிஸில் மேலாடை இல்லாமல் நடித்ததை பார்த்த ரசிகர்கள் சமந்தா இப்படியெல்லாம் நடிப்பாரா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், பிரியங்கா சோப்ராவுக்கே நான் அம்மாடா என அடல்ட் காட்சிகளில் எல்லை மீறி நடித்து மிரட்டியுள்ளார் சமந்தா.

வருண் தவான் உடன் லிப் லாக் காட்சிகள் மற்றும் சமந்தாவின் மேலாடையை கிழிக்கும் காட்சிகள் என சோஷியல் மீடியா முழுவதும் #SamanthaRuthPrabhu ஹாஷ்டேக் மீண்டும் இந்தியளவில் டிரெண்டாகி விட்டது.
அமேசான் பிரைமில் வெளியானது: சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கு, இந்தி என ஒட்டுமொத்தமாக 20 மொழிகளில் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. காலை முதலே ரசிகர்கள் சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸை பார்த்து சமந்தாவின் நடிப்பையும் வருண் தவானின் ஆக்ஷனையும் பார்த்து அசந்து போயுள்ளனர். சினிமாவில் ஸ்டன்ட் மேன் போல வருண் தவான் காட்டப்படுகிறார். தனது மகளை காப்பாற்றி வரும் ஸ்பை ஏஜென்ட்டாக இருக்கும் சமந்தா சந்திக்கும் சிக்கல்களையும் இந்த வெப்சீரிஸில் காட்டியுள்ளனர்.
சட்டையைக் கிழித்து: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ராஜி கதாபாத்திரத்தில் இலங்கை போராளியாக சமந்தா நடித்திருப்பார். பேருந்தில் அவர் மீது தவறான இடங்களில் ஒரு நபர் தொடுவதும், அதன் பின்னர் சமந்தா உடலுறவு கொள்வது போல ஒருவரை போட்டுத் தள்ளுவதும் என அதிரடியாக படுபோல்டான காட்சிகளில் நடித்து மிரள வைத்திருப்பார். இந்நிலையில், சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸில் சமந்தாவின் சட்டையை கிழிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன.
வருண் தவான் உடன் லிப் லாக்: சமந்தா மற்றும் வருண் தவான் இருவரும் லிப் லாக் அடிக்கும் காட்சியையும் ரசிகர்கள் அதிகளவில் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து சமந்தா ரூத்லெஸ் பிரபு என கேப்ஷன் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். சிட்டாடல் வெப்சீரிஸின் ஸ்டன்ட் காட்சிகளிலும் சமந்தா மற்றும் வருண் தவான் வேறலெவலில் மிரட்டியுள்ளனர். சிம்ரன் ஒரு சிறப்பான ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாண்ட் கேர்ள்: சிட்டாடல் வெப்சீரிஸில் சமந்தாவின் போல்டான பட்டையைக் கிளப்பும் ஆக்ஷன் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் படத்திலேயே சமந்தா பாண்ட் கேர்ளாக நடிக்கலாம் என கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக சமந்தா கஷ்டப்பட்டு வருகிறார் என புரமோஷன் வீடியோக்களை சிலர் ஷேர் செய்த நிலையில், ஆன் ஸ்க்ரீனில் சமந்தாவின் நடிப்பை பார்த்தால் ஃபயர் விடாமல் இருக்க முடியாது என்கின்றனர். இன்னும் அந்த வெப்சீரிஸில் என்னவெல்லாம் தரமான சம்பவம் இருக்கு என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அமேசான் பிரைமை ஆன் செய்து பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











