ஓடிடியிலும் சறுக்கிய சமந்தா.. அந்த பிட்டு சீனை தவிர ஒண்ணுமே இல்லை?.. Citadel Honey Bunny விமர்சனம்!
சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் சமந்தாவை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு சேர்த்தது. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான வெப்சீரிஸ்கள் எல்லாமே இதுவரை ஹிட் அடித்து வந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியான சமந்தாவின் சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் ரசிகர்களை கொஞ்சம் கூட கவரவில்லை.
ரூசோ சகோதரர்கள் தயாரிப்பில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. ராஜ் மற்றும் டிகே இருவரும் இந்த சீரிஸை உருவாக்கியுள்ளனர். பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் வெப்சீரிஸுக்கு ப்ரீக்வெல் போல இந்த வெப்சீரிஸ் அமைந்துள்ளது.

சமந்தாவின் மகளாக வரும் சிறுமி நாடியா தான் பிற்காலத்தில் பிரியங்கா சோப்ராவாக சிட்டாடல் ஏஜென்ட்டாக தூள் கிளப்பப் போகிறார். ஆனால், சிட்டாடல் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இந்த ப்ரீக்வெல் கொஞ்சம் கூட கவரவில்லை என்பது தான் நிதர்சனம். சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸை எதற்காக பார்க்கலாம், எதற்காக பார்க்கக் கூடாது என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
சிட்டாடல் ஹனி பன்னி கதை: வருண் தவானை செல்லமாக bunny என அழைக்கின்றனர். சமந்தாவின் பெயர் ஹனி என அழைக்கப்படுகிறது. 1992 மற்றும் 2000 என இரு காலக்கட்டத்தில் நடக்கும் கதை தான் இந்த வெப்சீரிஸ். புராஜெக்ட் தல்வார் எனும் ரகசிய புராஜெக்ட் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என பாபா (கே கே மேனன்) தனது டீமை பயன்படுத்துகிறார். பாலிவுட் ஹீரோக்களுக்கு டூப் போடும் நடிகராக வரும் வருண் தவான் அநாதையாக இருந்த போது அவரை தத்தெடுத்து வளர்த்த பாபா ஏஜென்ட்டாக மாற்றுகிறார். துணை நடிகையாக நடிக்க வரும் ஹனி (சமந்தா) மீது வருண் தவானுக்கு காதல் ஏற்பட அவரை தனது டீமில் சேர்த்துக் கொள்ளும் சூழல் உருவாகிறது. 1992ல் இந்த கதை நடந்தால் 2000ம் ஆண்டு பாபா டீமிடம் இருந்தும் சிம்ரன் டீமிடம் இருந்தும் தனது மகள் நாடியாவை காப்பாற்ற சமந்தா போராடுகிறார். அவர்கள் இருவரையும் வருண் தவான் தேடுவது தான் இந்த ஹனி பன்னி வெப்சீரிஸின் கதை.

வெப்சீரிஸ் தேறுமா? தேறாதா?: ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் வெளியான ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ், விஜய் சேதுபதி, ராஷி கன்னா நடித்த ஃபர்ஸி வெப்சீரிஸ் எல்லாம் விறுவிறுப்பாக நகர்ந்த நிலையில், ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. ஆனால், பெரிதும் பில்டப் செய்யப்பட்டு வெளியான சமந்தாவின் இந்த வெப்சீரிஸ் ஆரம்பத்திலேயே கதை இப்படித்தான் நகரும் என்றும் சமந்தாவின் சீக்ரெட் பற்றிய ட்விஸ்ட் குறித்தும் ரசிகர்களுக்கு பாபாவை விட முன்பாகவே சந்தேகம் வர வெப்சீரிஸும் அதே ரூட்டில் தான் சென்று சொதப்பிவிட்டது.
படுமொக்கையாக எடுத்த வெப்சீரிஸை காப்பாற்ற என்ன செய்யலாம் என யோசிக்க எடிட்டரை வைத்து 1992 காலக் கட்டம் மற்றும் 2000ம் காலக்கட்டம் என ஷாட்களை முன்னும் பின்னுமாக நான் லீனியர் முறையில் எடிட் செய்து ரசிகர்களை மேலும், குழப்பி விடுகின்றனர். ஆக்ஷன் காட்சிகளில் காட்டிய ஆர்வத்தை கதை மற்றும் திரைக்கதையில் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சமந்தா சீன்ஸ்: சமந்தாவுக்கு தொடர்ந்து படங்கள் சொதப்பி வரும் நிலையில், இந்த வெப்சீரிஸில் முடிந்த வரை நல்லா நடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், முழுமையாக சிறந்த நடிப்பு என்றால் ராஜி கதாபாத்திரத்தில் அவர் மிரட்டியது தான். பல இடங்களில் சமந்தாவாகவே தெரிகிறார். வருண் தவான் நடிப்பும் பெரிதாக ஒட்டவில்லை. சமந்தாவுடன் அவர் லிப் லாக் அடிக்கும் காட்சியில் தான் முழு ஈடுபாட்டை காட்டியிருக்கிறார் என தெரிகிறது. சமந்தாவின் சில போல்டான சீன்கள் வெப்சீரிஸை முழுவதுமாக பார்த்துவிட்டு கடைசியில் சேர்த்திருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது. சிம்ரன், தலைவாசல் விஜய் என பல தமிழ் முகங்கள் இருந்தாலும் சிட்டாடல் ஹனி பன்னி பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ராஜ் மற்றும் டிகேவின் வெப்சீரிஸ் என்பதற்காக ஒருமுறை பார்க்கலாம். சமந்தா ஃபேன் என்றால் தாராளமாக பார்க்கலாம். ஆனால், நிச்சயம் பெரிய ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications











