சமந்தாவை பார்க்கவே பாவமா இருக்கே.. ரொம்ப டல்லாகிட்டாரே.. ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை சமந்தா நடித்துள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் வரும் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதை முன்னிட்டு ஏகப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை சமந்தா. திடீரென சிகப்பு நிறத்தில் ஹேர் கலரிங் எல்லாம் செய்த சமந்தா ரொம்பவே ஒல்லியாகவும் மாறியது ரசிகர்களை வருத்தமடைய செய்தது.
நாக சைதன்யாவை விவாகரத்து செய்து சமந்தா பிரிந்த நிலையில், மயோசைடிஸ் நோய் பாதிப்பில் பல மாதங்கள் துடியாய் துடித்து வந்தார். நடிகை சமந்தா சில மாதங்கள் சினிமாவுக்கு ஓய்வு விடுத்த நிலையில், அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

மீண்டும் நடிக்க வந்து விட்டேன் என சமந்தா சொல்லி வந்தாலும், இன்னமும் அவருக்கு ஒரு பெரிய படம் கூட கிடைக்கவில்லை. பங்காரம் படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியானது. சிட்டாடல் வெப்சீரிஸ் வெற்றிப் பெற்றால் மீண்டும் சமந்தாவுக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டல்லடித்த சமந்தா: நேற்று மும்பையில் நடைபெற்ற சிட்டாடல் ஹனி பன்னி படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை சமந்தா கருப்பு நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துக் கொண்டு வந்தார். பெரிதாக மேக்கப் எல்லாம் போட்டு அழகு பொம்மையாக வராமல் அப்படியே சாதாரணமாக சமந்தா வந்ததை பார்த்து அங்கிருந்தவர்களே ஷாக் ஆகிவிட்டனர். சமந்தா என்ன இப்படி டல்லடிக்கிறார் என்றும் அவருக்கு என்ன ஆனது என்றும் ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அந்த வீடியோவை ஷேர் செய்து எழுப்பி வருகின்றனர்.
கண்ணெல்லாம் டயர்ட்டா இருக்கே: சமந்தா தொடர்ந்து சிட்டாடல் படத்தின் ஹனி பன்னி படத்திற்கான புரமோஷனுக்காக பல இடங்களுக்கு ரெஸ்ட்டே இல்லாமல் சென்று வருவதால் அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சமந்தாவின் கண்ணெல்லாம் ஃபிரெஷ்ஷாக இல்லாமல் ரொம்பவே டயர்ட்டாக இருப்பதை பார்த்து சமந்தாவுக்கு என்ன தான் பிரச்சனை என்கிற பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. வருண் தவான் சமந்தாவை தொடர்ந்து நச்சென நிகழ்ச்சிக்கு கோட் சூட் அணிந்து வந்து பலரது கவனத்தையும் கவர்ந்த நிலையில், ஹீரோயினான சமந்தா பெரிதாக யாரையும் கவரவில்லை என்கின்றனர்.
வெப்சீரிஸ் மிரட்டும்: ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடித்து வெளியான சிட்டாடல் வெப்சீரிஸின் ப்ரீக்வெலாக இந்த சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் அம்மாவாகவே சமந்தா நடித்துள்ளார் என்றும் இதில், வரும் குழந்தை தான் பின்னாளில் பிரியங்கா சோப்ராவாக மாறுகிறார் என்றும் ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர். சமந்தாவின் முடி மற்றும் தோற்றம் எல்லாம் ரொம்பவே வயதானவர் போல அவரை மாற்றி வருகிறது என்றும் சப்ஸ்டன்ஸ் படத்தில் வரும் டெமி மூர் போல சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறாரா? என்றும் கிண்டல்களும் கிளம்பியுள்ளன.
கம்பேக் கொடுப்பார்: நடிகை சமந்தா இந்த பிரச்சனை எல்லாம் சீக்கிரமே சரி செய்து கம்பேக் கொடுப்பார் என்றும் தொடர்ந்து புரமோஷன் செய்து வருவதால் தான் இப்படி டயர்ட்டாக தெரிகிறது மற்றபடி ஒன்றுமில்லை என்றும் அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











