அது என்ன பிரெக்னன்ஸி கிட்டா?.. சமந்தாவின் புதிய போஸ்ட்டால் ஷாக்கான ஃபேன்ஸ்.. இது வேற மேட்டரு!

சென்னை: நடிகை சமந்தா தனது கையில் ஒரு ஸ்லிப்பை காட்டும் புகைப்படத்தை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உடனடியாக அது பிரெக்னன்ஸி கிட்டா? என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சமந்தா அப்படி ஏதும் பூதம் கிளம்பி விடக் கூடாது என்பதற்காகவே க்ளோஸ் அப்பில் 2வது போட்டோவையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா முதல் படத்திலேயே தன்னுடன் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் வலையில் விழுந்த நிலையில், சில ஆண்டு காதலுக்குப் பிறகு சென்னை பொண்ணு ஹைதராபாத் மருமகளாக நாகார்ஜுனா குடும்பத்திற்கு சென்று விட்டார்.

samantha ott dating

சமந்தா அக்கினேனி என தனது பெயரை இன்ஸ்டாகிராமில் மாற்றி வைத்திருந்த அவர், நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்து விட்டார். இன்ஸ்டாகிராமில் அக்கினேனியை சமந்தா நீக்கிவிட்டு அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

உணவா? உடலுறவா?: நடிகை சமந்தா உணவு இல்லாமல் கூட இருந்து விடுவேன். ஆனால், உடலுறவு இல்லாமல் இருக்க மாட்டேன் என பழைய பேட்டி ஒன்றில் பேசியதை இப்போதும் போட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபத்தில், ஹெல்த் டிப்ஸ் கொடுக்கிறேன் என்றும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய சமந்தா கொஞ்ச நாட்கள் சைலன்ட்டாக இருந்து வந்த நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் வெப்சீரிஸ்: சிட்டாடல் வெப்சீரிஸ் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள நிலையில், அடுத்து பங்காரம் படத்தில் நடிக்கப் போகிறேன் என சமந்தா அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியில் மீண்டும் ஒரு வெப்சீரிஸில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ராஜ் மற்றும் டிகே தயாரிப்பில் உருவாகும் ரக்த் பிரம்மாண்ட் எனும் அந்த வெப்சீரிஸில் மிர்சாபூர் நடிகர் அலி ஃபஸல் லீடு ரோல் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆதித்யா ராய் கபூர் நடிக்கப் போவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரெக்னன்ஸி டெஸ்ட் கிட்?: நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரில் இருந்துக் கொண்டு கையில் ஏதோ ஒரு ஸ்லிப்பை காட்டுவது போன்ற போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அது பிரெக்னன்ஸி டெஸ்ட்டுன்னு முதலில் நினைத்து ஷாக் ஆகிவிட்டோம் சமந்தா என கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

டேட்டிங் போக போறேன்: ஆனால், சமந்தாவின் கையில் இருப்பது ஒரு பேப்பர் ஸ்லிப் என்றும் அதில், ஆகஸ்ட் 1ம் தேதி டேட் போக போறீங்க என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த காலத்தில் வெயிட் மெஷினில் உடல் எடையை பார்த்தால் அதன் பின்னாடி அதிர்ஷ்டம் தரக்கூடிய வார்த்தைகள் இடம்பெறுவதை போல ஒரு விஷயத்தை தான் நடிகை சமந்தா தற்போது காட்டியுள்ளார். அதற்குள் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? என்றே ஷாக்கை கிளப்பிவிட்டனர் நெட்டிசன்கள்.

சிட்டாடல் ரிலீஸ் தேதி: நடிகை சமந்தா டேட்டிங் செல்வதை எல்லாம் காட்டவில்லை என்றும் சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸ் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகப் போவதை தான் அவர் இப்படி அறிவித்துள்ளாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் அந்த ஸ்லிப்பில், Find Honey on 01/08 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X