அப்போ சோபிதா.. இப்போ சமந்தா.. பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாகுந்தலம் ஹீரோயின்.. புது வெப்சீரிஸ்!
மும்பை: உடல் நலக்குறைவு காரணமாக சமந்தா நடித்த படங்கள் தாமதமாகி வந்த நிலையில், கஷ்டப்பட்டு அந்த படங்களை முடித்துக் கொடுத்த சமந்தா, சில மாதங்கள் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் தான் திரும்பி விட்டதாக சமீபத்தில் அறிவித்த சமந்தா, அடுத்ததாக இந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் சீரிஸ் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், ராஜ் மற்றும் டிகே தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வெப் சீரிஸில் தான் அடுத்ததாக சமந்தா நடிக்கப் போகிறார் என்கின்றனர்.

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் டேட்டிங்கில் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நடிகை சோபிதா துலிபாலா கடைசியாக பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் உடன் இணைந்து தி நைட் மேனேஜர் எனும் வெப் சீரிஸில் நடித்திருந்தார். தற்போது அதே ஆதித்யா ராய் கபூருடன் தான் சமந்தா இணைந்துள்ளார் என்கின்றனர்.
சறுக்கிய சமந்தா: நடிகை சமந்தாவுக்கு யசோதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி மற்றும் சாகுந்தலம் திரைப்படங்கள் சரியாக அமையவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக சமந்தாவின் சினிமா வாழ்க்கை சற்று சறுக்கிய நிலையில், தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
ஓடிடி பக்கம்: இந்தியில் படங்களில் சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ஓடிடி வெப்சீரிஸ்களிலேயே சமந்தா நடித்து வருகிறார். தி ஃபேமிலி மேன் சீசன் 2 வெப் சீரிஸ் சமந்தாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக சிட்டாடல் வெப்சீரிஸ் ரிலீசுக்காக அவர் காத்திருக்கிறார். இந்நிலையில், அடுத்து ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக ரக்த் பிரம்மாண்ட் எனும் வெப்சீரிஸில் நடிக்கவுள்ளாராம்.

தும்பாட் பட இயக்குநர்: இந்திய சினிமாவின் ஹாரர் ரசிகர்களை அலற விட்ட தும்பாட் படத்தை இயக்கிய ரகி அணில் பார்வே இயக்கத்தில் உருவாகப் போகும் இந்த புதிய வெப் சீரிஸ் தான் நடிகை சமந்தா கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. ராஜ் மற்றும் டிகே இந்த வெப் சீரிஸை தயாரிக்கின்றனர்.

வாமிகா கபி: வெப்சீரிஸுக்கென்றே அளவெடுத்து செஞ்ச நடிகையாக வலம் வரும் வாமிகா கபி தமிழில் ஜெயம் ரவியின் ஜீனி மற்றும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் வாமிகா கபி சமந்தாவுடன் இந்த வெப்சீரிஸில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் வருண் தவானின் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இவர் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தளபதி 69?: மம்மூட்டியுடன் ஒரு படம், தளபதி 69ல் இவர் தான் விஜய்க்கு ஜோடி என நடிகை சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது. பங்காரம் எனும் படத்திலும் இவர் கமிட்டாகி இருப்பதாக அறிவித்தார். கூடிய சீக்கிரமே ரவுண்டு கட்டி அடிக்கப் போகிறார் சமந்தா என்று தெரிகிறது.
.


Click it and Unblock the Notifications











