சமந்தாவின் ஆக்ஷன் ட்ரீட்.. ஓடிடிக்கு வரும் எங்கள் தங்கம்.. எப்போ? எந்த தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

சென்னை: நடிகை சமந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பவர்ஃபுல் ஆக்ஷன் அவதாரத்தில் களம் இறங்கியுள்ள படம் தான் 'மா இண்டி பங்காரம்'. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது!

நடிகை சமந்தாவிற்கு 'தி ஃபேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடல்' போன்ற வெப் சீரிஸ்கள் மூலம் ஆக்ஷன் ராணியாக மிகப்பெரிய இமேஜ் கிடைத்தது. அந்த வகையில், வெப் சீரிஸ் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே தான் இந்த 'எங்கள் தங்கம்' திரைப்படத்திற்கு வெறித்தனமான கதையை உருவாக்கியுள்ளனர். அலா முதலாயிந்தி, ஓ பேபி போன்ற ஃபீல் குட் படங்களை இயக்கிய நந்தினி ரெட்டி, முதன்முறையாக சமந்தாவை வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

Samantha Engal Thangam OTT
Photo Credit:

படத்தின் கதை: காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் அவளது கணவரான திகந்த் மஞ்சலே
தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கிராமத்து வருகிறார்கள். பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதால், மூன்று வருடங்களாக பிரிந்திருந்த குடும்பத்தை இவர்கள் முதன்முறையாக சந்திக்கிறார்கள். இதனால், சமந்தா புகுந்த வீட்டில் இருப்பவர்களின் அன்பை பெற முயற்சிக்கிறார். இந்த நேரத்தில் தான் சமந்தாவின் பழைய பகை குடும்பத்திற்கு ஆபத்தாக வந்து நிற்க, இந்த ஆபத்தில் இருந்து சமந்தா குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.

ஓடிடி ரிலீஸ்: கடந்த ஜூன் 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படம், சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் கலவையான மற்றும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. தியேட்டர்களில் சமந்தாவின் ஆக்ஷன் அவதாரத்தை பார்க்க தவறியவர்களுக்காக ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மா இண்டி பங்காரம்' படம் வரும் ஜூலை 17ஆம் தேதி ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. சமந்தாவின் வெறித்தனமான ஆக்ஷன் பிளான் மற்றும் சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம் ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு பார்க்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X