OTT: சமந்தா முதல் சவுந்தர்யா ரஜினிகாந்த் வரை.. அமேசான் பிரைமின் மெகா ஓடிடி லிஸ்ட்.. பார்க்க ரெடியா?

சென்னை: நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக அமேசான் பிரைம் தனது ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வரிசையாக பல படங்களையும் வெப்சீரிஸ்களையும், வெப் ஷோக்களையும் களமிறக்கப் போகிறது. இன்று நடைபெற்ற அமேசான் பிரைம் நிகழ்ச்சியில் கரண் ஜோஹர், சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். வரிசையாக அமேசான் பிரைம் இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்களை ஹேப்பி ஆக்கவுள்ள நிகழ்ச்சிகளை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது.

சமந்தா, வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள சிட்டாடல் இந்திய வெர்ஷனுக்கு சிட்டாடல் ஹனி பனி என்கிற டைட்டிலை வைத்திருக்கின்றனர். சமந்தா மட்டுமின்றி அனன்யா பாண்டே, உர்ஃபி ஜாவேத், அசோக் செல்வன் என ஏகப்பட்ட பிரபலங்களின் சீரிஸ் மற்றும் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

Samantha to Soundarya Rajinikanth OTT products will soon arrive on Amazon Prime

சமந்தா வெப்சீரிஸ்: ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி பேன் வெப் சீரிஸ் இரண்டு பாகங்கள் வெற்றிகரமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதன் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா இலங்கை போராளியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, ராஷி கன்னா நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விரைவில் சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. ஹாலிவுட்டில் உருவான சிட்டாடல் வெப் சீரிஸில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Samantha to Soundarya Rajinikanth OTT products will soon arrive on Amazon Prime

கால் மீ பே: பாலிவுட் நடிகை அனன்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் கால் மீ பே வெப்சீரிஸும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர். கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸை காலின் டி குன்ஹா இயக்கியுள்ளார்.

Samantha to Soundarya Rajinikanth OTT products will soon arrive on Amazon Prime

தி ராணா கனெக்சன்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளியான ராணா நாயுடு வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடல்ட் கன்டென்ட் அதிகமாக இருந்ததால் கடுமையான விமர்சனங்களும் கிளம்பின. இந்நிலையில், தி ராணா கனெக்சன் எனும் டாக்‌ஷோ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

Samantha to Soundarya Rajinikanth OTT products will soon arrive on Amazon Prime

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு: அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், பலர் நடிப்பில் உருவாக்கியுள்ள கேங்ஸ் -குருதி புனல் படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார் நோவா என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இதே போல பல்வேறு புதிய படைப்புகளை அமேசான் பிரைம் இந்த ஆண்டு வெளியிட காத்திருக்கிறது.

பெரிய லிஸ்ட்: அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹாப்பி', அனில் கபூரின் 'சுபேதார்', ஃபால் அவுட், மா கா சம், வாக் கேர்ள்ஸ், பேண்ட் வாலா, உர்ஃபி ஜாவேத்தின் ஃபாலோ கார் லோ யார், தி டிரைப், டேரிங் பார்ட்னர்ஸ், அந்தேரா, டல்டல், அரேபியா காதலி, கஃப், தி கிரேட் இந்தியன் கோட், ரங்கீன், மட்கா கிங் என பல படங்கள் மற்றும் வெப்தொடர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X